அடுத்தவர்கள் வீட்டில் போடப்படும் சாம்பிராணியின் மனம் நம் வீடு வரை வீசுகிறது. நம்வீட்டு சாம்பிராணி மட்டும் ஏன் மணக்கவில்லை?

mahalakshmil
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த விஷயத்தை எடுத்தாலும் இனம்புரியாத ஒரு பயம் இருக்கும். எல்லா பெண்களும் இப்படி இருப்பதில்லை. ‘புலியை முறத்தால் அடித்து துரத்தியவர்கள் தான் நாம் பெண்கள்’. இருந்தாலும் வீட்டிலோ வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் மனதளவில் சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் எப்படிப்பட்ட பெண்களுக்கும், நம் வீட்டில் இறைவனுக்காக சூட்டப்படும் வாசனை மிகுந்த பூக்களுக்கு மனம் வரவில்லை, நம் வீட்டு பூஜை அறையில் ஏற்றப்படும் சாம்பிராணி மனம் வரவில்லை, நம் வீட்டை எவ்வளவுதான் அழகு படுத்தினாலும் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கவில்லை, இப்படி என்று ஒரு சூழ்நிலை வந்துவிட்டால் பெண்கள் கட்டாயம் பயப்பட தான் செய்வார்கள். இது இயற்கை தான். ஏனென்றால் நம் வீடு மங்களகரமாக இல்லாமல், நல்ல வாசனை வீசாமல் இருக்கும் பட்சத்தில் நம் வீட்டில் கெட்ட சக்தி அதிகம் இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் வருவது உண்டு.

mahalakshmi

ஆன்மீக ரீதியாக நல்ல நறுமணம் வீசும் வீட்டில் தான், மகா லட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இப்படி இருக்க, நம் வீடு சூனியம் அடைந்தது போல் இருந்தால் யாருக்குத்தான் பயம் ஏற்படாது? சரி. நம் வீடு இப்படி இருக்க என்ன தான் காரணமாக இருக்கும்? இந்த கேள்விக்கான பதில் மிகவும் சுலபம் தான். அதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு வீட்டை கோவிலாக மாற்றி வைப்பது என்பது அந்த வீட்டின் பெண்ணின் கையில் தான் உள்ளது. கோவிலில் அந்த அம்பாளை நாம் வழிபடுகின்றோம். வீடு கோவிலாக மாற வேண்டுமென்றால் வீட்டிலிருக்கும் பெண் அம்பாளாக இருக்க வேண்டும். புரிகிறதா? எந்த நேரமும் என்னை வழிந்த முகத்துடன், நெற்றியில் குங்குமத் திலகம் வைக்காமல், அனாவசியப் பேச்சுகளைத் குறைத்து, அனாவசியமான வார்த்தைகளை குறைத்தாலே போதும். வீடு லட்சுமி கடாட்சம் பெற்று விடும்.

mahalakshmi

சில பெண்கள், அவர்கள் வீட்டு உறுப்பினர்களை, அவர்களே திட்டி சாபம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதாவது ‘நீங்கள் எல்லாம் கட்டாயம் அனுபவிக்கப் போகிறீர்கள். இப்போதெல்லாம் கஷ்டம் தெரியாது. நீங்கள் செய்யும் பாவத்திற்கு கட்டாயம் நீங்கள் கஷ்டத்தை அனுபவிக்க தான் போகிறீர்கள்’. இப்படியெல்லாம் ஏதாவது ஒருவகையில் சாபம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் தவறு செய்பவர்களாக இருந்தாலும் கூட, பெண்களான நீங்கள் கட்டாயம் இந்த வார்த்தைகளை உங்கள் வீட்டில் பேசக்கூடாது. கட்டாயம் லட்சுமி தங்க மாட்டாள் என்பதுதான் உண்மை. அமைதியும் சந்தோஷமும் எந்த வீட்டில் நிலைத்திருக்கின்றது அந்த வீடு இயற்கையாகவே வாசம் வீசும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கெட்டது செய்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் அவரை எடுத்து சொல்லி திருத்த வேண்டியது தான் பெண்களின் கடமையே தவிர, அவர்களை கரித்துக் கொட்டுவது கிடையாது.

mahalakshmi

உங்களது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு, கோவிலிலிருந்து தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளித்து விட்டு நீங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் போதும். உங்கள் வீடு கோவிலாக மாறிவிடும். உங்கள் வீட்டில் போடப்படும் சாம்பிராணி வாசம் அடுத்த வீட்டிற்கு அல்ல, அடுத்த வீதி வரை மணம் வீசும். இதோடு சேர்த்து உங்களது வீட்டையும் உங்களது சமையல் அறையையும் சுத்தமாக வைத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
இந்த தேதியில் பிறந்தவர்கள், இந்த நாட்களில் திருப்பதிக்கு சென்றால் கட்டாயம் குபேரராகும் யோகத்தை பெறலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetil lakshmi kataksham. Vettil pengal seiya vendiyavai Tamil. Vettil seiyya vendiyavai. Vettil seiyya kodatha thavarugal. Lakshmi kataksham tips in Tamil.

- Advertisement -