இறைவனை முழுமையாக நம்பாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இறைவனை ஏன் நம்ப வேண்டும்? இது படிச்சா உங்க கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும்!

temple-tressure
- Advertisement -

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கல்லை சிலையாக, தெய்வ உருவாக காண்பவர்களுக்கு தெய்வம் கண்களில் தெரியும். அக்கல்லை வெறும் கல்லாக காண்பவர்களுக்கு கல்லாக மட்டுமே தான் தெரியும். ஆக கல்லில் படித்திருக்கும் அந்த உருவத்திற்கு அர்த்தம் கிடையாது. நாம் பார்க்கும் பார்வையில் தான் அர்த்தம் இருக்கிறது. எனவே எதை நீங்கள் உண்மை என்று நம்புகிறீர்களோ அது தான் உண்மையாக இருக்கிறது.

இறைவன் ஒரு மனிதனுக்கு எவ்வளவு பாரத்தை சுமக்க முடியுமோ அவ்வளவு பாரத்தை மட்டுமே கொடுப்பான். அதற்கு மேல் அவன் மனிதனுக்கு பாரத்தை கொடுப்பதில்லை. ஆனால் பாரத்தை சுமந்து நடந்து கொண்டிருக்கும் மனிதன், கடவுளை முழுமையாக நம்பாவிட்டால் அது அவனுக்கு சுமையாக தெரிகிறது. எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்காக நடக்கிறது என்று எடுத்துரைக்கும் விதமாக ஒரு கதையை பார்ப்போமா?

- Advertisement -

ஒருமுறை விளையாட்டு பிள்ளை கிருஷ்ணரிடம் தாய், தந்தையரை இழந்த மிகுந்த பக்தி கொண்ட ஒரு பெண் வந்து தன் பக்தியினை எடுத்துக் கூறுகிறாள். ‘நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பதில் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ ஏதாவது கூறுங்கள் என்று கேட்கிறாள். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு அழுக்கு படிந்த கோணி பையை கொடுத்து இதை நான் கூறும் வரை தலையில் சுமந்து வா, என்று கூறி விடுகிறார். பக்திபூர்வமாக எதையோ கூறுவார் என்று எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு இது ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் இறைவன் விதித்த கட்டளையின்படி அந்த கோணி மூட்டையை சுமந்தபடி கிருஷ்ணர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவளும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அதனுள் என்ன இருக்கும்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது ஆனால் கட்டு மிகவும் இறுக்கமாக கட்டப்பட்டு இருந்ததால், அவளால் அதனை அவிழ்க்க முடியவில்லை. தான் அதை பார்க்கக் கூடாது என்பது கிருஷ்ணரின் விருப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவள், சரி இறைவன் விதித்தது என்று மீண்டும் எதையும் நினைக்காமல் கஷ்டப்பட்டு சுமந்து கொண்டு கிருஷ்ணருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அவள் உன் மீது கொண்ட பக்தியின் காரணமாக உமக்கு பணிவிடை புரிய வந்தேன். ஆனால் நீரோ இந்த அழுக்கு மூட்டையை என்னிடம் கொடுத்து விட்டது நியாயமா? என்று கோபப்படுகிறாள்.

- Advertisement -

உன் பலவீனத்தில் தான் என் பலம் ஒளிந்து கொண்டிருக்கிறது. எதுவும் பேசாதே தொடர்ந்து வா என்று கூறிவிட்டார். இன்னும் சில நாட்கள் அதே போல ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்து அந்த கோணி மூட்டையை சுமந்தபடி அப்பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளால் சுமக்க முடியாத போது இறைவன் ஒரு கையை பிடித்து அவளுக்கு உதவியும் செய்து வந்தார். ஒரு நாள் ஒரு இடத்தை அடைந்ததும், போதும் இதுவரை நீ தூக்கி சுமந்து வந்தது என்று இறக்கி வைக்க சொன்னார். இதில் அப்படி என்ன இருக்கிறது பார்ப்போமா? என்று சிரித்தபடி ஸ்ரீ கிருஷ்ணர், அந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு சீக்கிரம் திறந்து பார்ப்போம் கிருஷ்ணா!! என்று ஆவலுடன் கூறினாள்.

கிருஷ்ணர் புல்லாங்குழலால் இசைக்க முடிச்சுகள் தானாகவே அவிழ்ந்தன. மூட்டைக்குள் வைக்கோல் நிறைய இருந்தது. அதற்கு இடையிடையே தங்க காசுகளும், வைர, வைடூரியங்களும், மாணிக்கங்களும், ஆபரணங்களும் கொட்டிக் கிடந்தன. நீ இதுவரை பொறுமையாக இருந்ததற்கு உனக்கு இந்த பரிசினை அளிக்கிறேன் என்று கூறி இறைவன் அவளுக்கு அந்த மூட்டையினை பரிசாக கொடுக்கிறார். இதை பார்த்த அந்த பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதில் இருக்கும் அத்துனை பொருட்களும் தேவலோக கர்ப்பக விருட்சத்தால் மட்டுமே கொடுக்க வல்லது.

இத்தகு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்தும், நான் அதை புரிந்து கொள்ளாமல் உன்னை தவறாக நினைத்து விட்டேனே… உமது நோக்கம் புரிந்து நடந்திருந்தால் எனக்கு இது சுமையாகவே தெரிந்திருக்காதே.. இன்பமாக தானே இருந்திருக்கும்? நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்று காலில் விழுந்து அழுகிறாள். எனவே இறைவன் ஒருவருக்கு கொடுக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தும் அவர்களால் எவ்வளவு சுமக்க முடியுமோ, அவ்வளவு மட்டுமே கொடுப்பார். அதை சுமையாக பார்க்காமல் பொக்கிஷமாக பார்த்தால் நமக்கு இன்பம் மட்டுமே நீடிக்கும், வாழ்க்கை சுகமாக மாறும்.

- Advertisement -