உங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ

jathagam

ஜாதகம் கணிக்கும் போது மொத்தமிருக்கும் 12 கட்டங்கள் ஒவ்வொன்றும் நன்கு ஆராயப்பட்ட பின்பே பலன்கள் கூறப்படுகின்றன. அந்த 12 கட்டங்களில் லக்னம் எனப்படும் முதல் வீட்டுக்கு அடுத்ததாக இருக்கும் கட்டம் இரண்டாம் வீடு எனப்படுகிறது. இந்த இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம் மற்றும் வாக்கு ஸ்தானம் எனப்படும். இரண்டாம் வீட்டை வைத்து என்ன பலன்கள் கூற முடியும் என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

astro

முதலில் இரண்டாம் வீட்டு அதிபதி யார் ஜாதகத்தில் அவர் எங்கு இருக்கிறார், இரண்டாம் வீட்டின் மீது எந்த கிரகங்களின் பார்வை இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்பொழுது தான் சரியான பலன் கூற முடியும். இரண்டாம் வீடு என்பது ஒருவரின் செல்வநிலை, வங்கியில் இருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை குறிப்பதாக இருக்கிறது மேலும் ஜாதகரின் குடும்ப நிலை, குடும்பத்தின் தன்மை, ஜாதகரின் பேச்சுத்திறன், கண்பார்வை போன்றவற்றை பற்றியும் கூறலாம். ஒருவருக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தை பற்றி இந்த வீட்டை வைத்து பலன் கூறலாம். ஒருவருக்கு குழந்தை பாக்கியத்ததை கொடுக்கும் வீடு 5 ஆம் வீ்டு தான் என்றாலும் அந்த ஜாதகரின் மனைவி உட்பட குடும்பத்தின் நபர்களை குறிப்பதாக இரண்டாம் வீடு இருக்கிறது.

இரண்டாம் வீடு நன்றாக இருந்தால் தான் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் இரண்டாம் வீடு கெட்டிருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. அதே போன்று ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால் ஏன் என்று இரண்டாம் வீட்டை வைத்து பார்க்க வேண்டும். இரண்டாம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணம் ஆவதில் சிக்கல் உண்டாகும்.

jathagam astro

இரண்டாம் வீட்டின் அடுத்த பண்பு இளைய சகோதர விரயம் அல்லது மரணம் என்பதாகும். பொதுவாக ஜாதகத்தில்சகோதரத்தைப் பற்றி கூறுவது மூன்றாம் வீடு ஆகும். அந்த மூன்றாம் வீட்டிற்க்கு 12 ஆம் வீடு இரண்டாம் வீடு ஆகிறது. அதனால் அது மூன்றாம் வீட்டிற்க்கு விரய ஸ்தானம் ஆகிறது. இளைய சகோதரத்தின் மரணம் பற்றி இரண்டாம் இடம் கூறும்.

- Advertisement -

astrology

இரண்டாம் வீட்டின் பிரதான அம்சம் ஜாதகரின் பேச்சு திறனை பற்றி கூறுவதாகும். எனவே இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்றழைக்கின்றனர். அந்த இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் கடினமாக பேசும் தன்மை கொண்டவராக இருப்பார். கேது இருந்தால் முரட்டுத்தனமான, ஆபாச வார்த்தைகள் கலந்த பேச்சாக இருக்கும். புதன், குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் பேச்சு இனிமையாகவும், கருத்தாக்கத்துடனும், நகைச்சுவை கலந்ததாக இருக்கும்.

money

இரண்டாம் வீட்டை தன ஸ்தானம் எனப்படும் வருமானம், லாபத்தை பற்றியும் கூறுகிறது. நமக்கு வரும் வருமானம் அதாவது பொருளாதார வளர்ச்சி பற்றி கூறுவதும் இரண்டாம் வீடு ஆகும். இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தீயகிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி சராசரியான அளவில் தான் இருக்கும். பொருளாதார வளர்ச்சி பலனை கணிக்கும் போது 10 ஆம் மற்றும் 11 வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 6 ஆம் வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் 6 ஆம் வீடு ஜாதகர் செய்வது சுயதொழிலா அல்லது அடிமை தொழிலா என்று என்பதை கூறும் இடமாகும். இவற்றையேல்லாம் கணக்கில் கொண்டுதான் தன ஸ்தானம் பற்றிய விரிவான பலனை கூற வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
நீங்கள் மிக அதிக சொத்துகளை அடைய செய்யும் ஜாதக அமைப்பு

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Irandam veedu in Tamil. It is also called as Jathaga kattangal in Tamil or Kudumba sthanam in Tamil or Jothidathil 12 veedugal in Tamil or Irandam veedu palangal in Tamil.