நீங்கள் மிகப்பெரும் செல்வமும், நில சொத்துகளையும் பெற ஜாதகத்தில் இவை அவசியம்

sevvai

பெரும்பாலானோர் எட்டாம் எண் என்றாலே அதிகம் பயப்படுகின்றனர் இதற்கு காரணம் எட்டாம் எண் என்பது ஆயுள் காரகனாகிய சனி பகவானுக்குரிய எண்ணாக இருக்கிறது. நேர்மை தவறி நடந்தாலும், அநியாயங்கள் செய்து கொண்டிருந்தாலும் மிகக் கடுமையாக தண்டிக்க கூடிய நீதி தேவனாக சனி பகவான் இருக்கிறார். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய பலன்கள் நன்மையாக பெற்றவர்களுக்கும், சனி பகவானின் நல்லாதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் வாழ்வில் எட்டாம் எண்ணால் பல வகை நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

jathagam astro

நிலம், மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குவதற்கு அனைவருக்குமே விருப்பமிருந்தாலும் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைப்பதற்கு பூமிகாரகனாகிய செவ்வாய் பகவானின் அருட்கடாட்சம் வேண்டும். அத்தகைய செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் நின்று அந்த ஜாதகருக்கு யோகாதிபதியாகவும் மாறும் போது அந்த ஜாதகர்கள் கீழ்க்கண்ட பலன்களை வாழ்வில் கிடைக்கப் பெறுவார்கள்.
.
ஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் இடம் அல்லது வீட்டின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருந்து, அந்த செவ்வாய் பகவானுடன் சுப கிரகங்கள் சேர்க்கை ஏற்படுமானால் அந்த ஜாதகர் தனது வீர, தீர பராக்கிரமத்தால் மிகப்பெரும் செல்வமும், புகழும் அடைய கூடியவராக இருப்பார். அரசியலில் மக்கள் பிரதிநிதி அல்லது ஆன்மீக தலைவராக மக்களுக்கு சேவை செய்து மிகப் பெரிய உயர்வான நிலையை அடைவார். இத்தகைய திடீர் உயர்வு அந்த ஜாதகரே எதிர்பாராத வகையில் உண்டாகும். தன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் நன்மையான பலன்கள் ஏற்படும்.

sevvai

விவசாயத் தொழில், பூர்விக நிலம், செம்பு உலோகங்கள் தொடர்புடைய தொழில்கள், வியாபாரங்களில் மிகப் பெரிய லாபங்களை ஈட்டுவார்கள். விளையாட்டுத்துறையில் உலகப் புகழ் பெற்று மிகுந்த செல்வத்தையும் புகழையும் பெறுபவர்களாக இருப்பார்கள். ஜாதகருக்கு நெருங்கியவர்களே அதிசயத்தக்க வகையில் ஜாதகரின் இந்த திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு சொந்த வீடு, நிலம் அமைய இவை அவசியம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai graha adhirstam in Tamil. It is also called as Sevvai yogam palan in Tamil or Sevvai palangal in Tamil or Adhirstam in Tamil or Jothida palangal in Tamil or Jathaga palangal in Tamil.