உங்கள் வீட்டில் இருக்கும் இந்தப் பொருளை யாராவது இரவலாக கேட்டா கூட கொடுக்காதீங்க! காலம் காலமாக நீங்கள் சேர்த்து வைத்த அதிர்ஷ்டம், கட்டாயம் உங்களை விட்டுப் போய்விடும்.

Vilakku-lakshmi
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை எல்லாம் தானமாக அல்லது இரவலாகவோ அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று சில கட்டுப்பாடுகள் அந்த காலத்தில் இருந்தது. காலத்திற்கு ஏற்ப, இவையெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று சொல்லி இளைய தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக, அவற்றையெல்லாம் மாற்றி விட்டார்கள். அந்த வரிசையில் நம் வீட்டில் வைத்திருக்கும் குறிப்பிட்ட இந்த சில பொருட்களை தயவுசெய்து யாருக்கும் இரவலாக கூட கொடுக்க கொடுக்காதீங்க! அது என்னென்ன பொருட்கள் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நம்ம வீட்டு பூஜை அறையில் பயன்படுத்திய பொருட்களை வெளியாட்கள் வந்து இரவலாக கேட்கும்போது தயவு செய்து அதை, புண்ணிய காரியம் என்று நினைத்து தானமாகக் கொடுத்து விடாதீர்கள். சில பேர் வீட்டில் பெரிய பெரிய விசேஷங்களுக்கு பயன்படுத்தும் பெரிய அளவிலான குத்துவிளக்குகள் இருக்காது. நம்முடைய வீட்டில் நாம் ஏற்றி பயன்படுத்தி இருக்கும் குத்துவிளக்கு இருக்கும். தினம் தோறும் நாம் அதை சுவாமிக்கு ஏற்றி வைக்க மாட்டோம் அல்லவா?

- Advertisement -

பண்டிகை விசேஷ நாட்களில் தான் ஏற்றி வைப்போம். மற்ற சமயங்களில் நம் வீட்டு பூஜை அறையில் அந்த விளக்கு அந்த குத்துவிளக்குகள் பயன்படுத்தாமல் தான் இருக்கும். பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு அந்த விசேஷத்திற்கு பயன்படுத்திக்கொள்ள குத்துவிளக்கு தேவைப்படும். அதை நம் வீட்டில் வந்து இரவலாக கேட்கலாம். அப்படி கூட நம் வீட்டில் ஏயற்றிய குத்துவிளக்கை அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

ainthu-muga-vilakku

அதாவது நலுங்கு வைப்பதற்கு, ஹோமம் வளர்ப்பது, வீட்டில் பெரிய பூஜைகள் வைப்பது, இப்படிப்பட்ட பெரிய விசேஷங்களை நடத்தும்போது குத்துவிளக்கிற்கு முதல் இடம் உண்டு. சிலபேரது வீட்டில் பெரிய குத்து விளக்கு இல்லாத பட்சத்தில், அடுத்தவர்களது வீட்டில் வந்து இரவில் கேட்பார்கள். நம் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்த குத்துவிளக்கை அடுத்தவர்களுக்கு நாம் இரவலாகக் கொடுக்கும்போது, நம் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யம், லட்சுமி கட்டாயம், அதிஷ்டமும் அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

முடிந்தவரை குத்துவிளக்கு, பஞ்ச பாத்திரம், கலசம் என்று சொல்லுவார்கள் அதாவது, வீட்டில் விசேஷ பூஜைகள் வைக்கும்போது ஹோமங்கள் நடக்கும் போது நூல் சுற்றி கலசம் நிறுத்துவார்கள் அல்லவா, செம்பு, பித்தளை சொம்பு, இப்படிப்பட்ட நம் வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்கள் வீட்டு விசேஷத்திற்கு கூட இரவல் கொடுப்பது அவ்வளவு சரியான முறையல்ல.

kalasam

நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, பூஜை புனஸ்காரங்களை நாம் செய்து அந்த பொருட்களில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் வேறொருவர் கைக்கு மாறும் போது, உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றல் அவர்கள் வீட்டிற்கு சென்று விடும்.

- Advertisement -

kalasam

பழுதான, பழைய பூஜை ஜாமான்களை கடையில் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வேறு பொருட்களை வாங்குவதில் தவறு கிடையாது. அப்படி இல்லை என்றால் பழைய ஜாமான்களை கொடுத்துவிட்டு காசு கூட வாங்கிக் கொள்ளலாம்.

poojai

இல்லைங்க, எங்களுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனது, எங்களுடைய அதிர்ஷ்டம் அடுத்தவர்களுக்கு போனாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டுப் பொருட்களை நாங்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்து கட்டாயம் உதவி செய்வோம்’ என்று சொன்னால் அது உங்களுடைய இஷ்டம். ‘அவங்க வீட்டு குத்துவிளக்கு கொண்டுவந்து நம் வீட்டில் ஏற்றி வைத்தால், அவங்க வீட்டு அதிர்ஷ்டம், நம்ம வீட்டுக்கு வரும் என்று தெரிந்தே சில பேர், இப்படிப்பட்ட பூஜைப் பொருட்களை இரவலாக கேட்பவர்களும் உண்டு’ என்பது குறிப்பிடத்தக்கது.

bhagavathi poojai

சில வீடுகளில் பாட்டிமார்கள் இருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் இரவலாக இப்படிப்பட்ட பொருட்களை கேட்டால், கட்டாயம் கொடுக்க விடமாட்டார்கள். இது, சாஸ்திரபடி நம்முடைய முன்னோர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு தானே, தவிர உங்களது உதவி செய்யும் மனப்பான்மையை தடுப்பதற்காக சொல்லப்படும் குறிப்புகள் கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எதிர்ப்புகள் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க எலுமிச்சை வழிபாடு செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -