எத்தனை தவா தான் வாங்குவது? நம்மிடம் இருக்கும் இரும்பு தோசை கல்லிலேயே மொறுமொறு தோசை வார்க்க பழக்குவது எப்படி?

dosa-kal1
- Advertisement -

நமக்கு முந்தையவர்கள் இரும்பு தோசை கல்லில் தான் சூப்பராக மொறு மொறு தோசை வார்த்து கொடுத்தார்கள். கல் தோசை சுடுவதும் அதில் தான், கிரிஸ்பியான மொறு மொறு தோசை சுடுவதும் அதிலே தான். ஆனால் இன்றோ தோசை மொறுமொறுவென்று வர வேண்டும் என்பதற்காகவே நான்ஸ்டிக் தவாக்களை வாங்கி வைக்கிறோம். விதவிதமாக எந்த பிராண்டுகளில் நீங்கள் தவாக்கள் வாங்கினாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை நாம் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

மேலும் நான்ஸ்டிக் தவாவில் நாளாக நாளாக அதில் இருக்கும் கோட்டின் உரிந்து வர ஆரம்பிக்கும். இது உடலுக்குள் சென்றால் கேன்சர் போன்ற கொடிய நோய்களும் வரும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள், எனவே நான்ஸ்டிக் தவாக்களை தவிர்த்து, நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய இரும்பு தோசை கல்லிலேயே எப்படி மொறு மொறு என்று தோசை வார்க்க பழக்கி வைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

முதலில் பழைய இரும்பு தோசைக்கல் பயன்படாத நிலையில் இருந்தால் அதை பயன்படும் நிலைக்கு கொண்டு வருவதற்கு இந்த முறையை கையாளுங்கள். நீண்ட நாட்களுக்கு பயன்படாத இரும்பு தோசை கல் துருப்பிடித்திருக்கும். மேலும் அதன் வழவழப்பு தன்மை குறைந்து தோசை சுத்தமாக வார்க்கவே வராது. ஒரு டேபிள் ஸ்பூன் கல் உப்பை பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய எலுமிச்சையை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அரை மூடியை கையில் எடுத்து கல் உப்பை தொட்டு பரபரவென எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து விடுங்கள்.

நீங்கள் தேய்க்கும் பொழுதே துருப்பிடித்த கறை மற்றும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் வந்துவிடும். பத்து நிமிடம் கண்டிப்பாக இதை விடாமல் செய்யுங்கள். ஒரு முறை நன்கு தண்ணீரில் கழுவி விட்டு பின்னர் மீதம் இருக்கும் அரை மூடியை இதே போல உப்பைத் தொட்டு நன்கு தேயுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது தோசைக்கல் ரெடி! இந்த தோசை கல்லில் உடனடியாக தோசை சுட முடியாது.

- Advertisement -

ஒரு நாள் முழுவதும் இரண்டு பக்கமும் எண்ணெய் தடவி தோசை வார்க்கும் குழிப்பகுதியில் வடித்த கஞ்சி தண்ணியை ஊற்றி ஊற வையுங்கள். எண்ணெயுடன் கஞ்சி தண்ணீர் ஊறும் பொழுது நன்கு வழவழப்பு தன்மை பெறும். பிறகு மறுநாள் சாதாரண தண்ணீரால் அலசிக் கொள்ளுங்கள். சோப்பு எதுவும் போட வேண்டாம். நன்கு அடுப்பில் வைத்து காய விடுங்கள். பிறகு ஒரு சிறிய காட்டன் துணியில் கோலிகுண்டு அளவிற்கு புளியை விதைகள் இல்லாமல் உருட்டி எடுத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதை எண்ணெயில் துவைத்து நன்கு கல்லில் தடவி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கோவில்களில் ஏற்றப்படும் விளக்குகள் ஜொலிக்க காரணம் இதுதானா? இதோ உங்கள் வீட்டு விளக்கும் ஜொலிக்க அந்த ரகசிய குறிப்பு.

இப்போது எடுத்து தோசை மாவை ஊற்றி முதலில் கல்தோசை போல தடிமனாக சுட்டுப் பாருங்கள், கண்டிப்பாக தோசை கொஞ்சம் கூட ஒட்டாமல் அழகாக எடுக்க வரும். பிறகு மொறு மொறுவென தோசை சுட்டாலும் உங்களுக்கு கொஞ்சம் கூட ஒட்டாமல் தோசை வார்க்க வரும். துணியை பயன்படுத்துவதை விட, பாதி வெட்டிய வெங்காயம் அல்லது கத்தரிக்காய் போன்றவற்றையும் எண்ணெயில் தொட்டு தொட்டு நீங்கள் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது தோசையை ஒட்டாமல் எடுப்பதற்கு உதவி செய்யும்.

- Advertisement -