வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் தான் உள்ளதா ?

4538
vinayagar
- விளம்பரம் -

விநாயகரின் மனிதத்தலை வெட்டப்பட்டு அதற்கு பதிலாக யானையின் தலை பொறுத்தப்பட்டதை நாம் புராணங்கள் மூலம் அறியலாம். அப்படி வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போம்.

Patal Bhuvaneswar

உத்தரகாண்டில் உள்ள புவனேஸ்வர் என்ற கிராமத்தில் தான் அந்த குகை உள்ளது. பாட்டல் புபனேஸ்வர் என்றழைக்கப்படும் அந்த குகைக்குள் செல்லுவது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. 90 அடி ஆழமும் 160 மீட்டர் நீளமும் கொண்ட அந்த குகைக்குள் செல்லவேண்டுமான கடுமையான மூச்சி பயிற்சியும், வளைந்து நெளிந்து செல்லும் உடல் வாகையும் கொண்டிருக்க வேண்டும் . அதோடு அது வெறும் ஒரு குகை கிடையாது. அதற்குள் பல கிளை குகைகள் இருக்கின்றன.

- Advertisement -

சிவனின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே அந்த குகையை முழுமையாக சென்றடைய முடியும் என்று கூறப்படுகிறது. பலரும் அந்த குகைக்குள் செல்ல முயன்று பின் பாதி வழியில் திணறி திரும்பி வந்ததே மிச்சம்.

Patal Bhuvaneswar

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளை குகை கைலாயத்தை சென்றடைவதாக கூறப்படுகிறது. அந்த வழித்தடமும் இதுவரை சிதிலமடையாமல் இருப்பதாகவும் ஆனால் அதற்குள்ளும் யாரும் இறுதிவரை செல்லமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

vinayagar

இதையும் பார்க்கலாமே:
இரண்டு தலையுடன் வாழும் அதிசய சிறுவன் – வீடியோ

சிலர் இந்த குகையில் உள்ள விநாயகர் தலையை தரிசித்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் அதற்கான புகை படம் ஆதாரம் ஏதும் இல்லை. ஆகையால் அந்த குகையின் இறுதிவரை யாரேனும் சென்றுள்ளாரா என்பது இன்று வரை கேள்விக்குறிதான்.

Advertisement