இஷ்ட தெய்வத்தை இவ்வாறு வணங்கி பாருங்கள். உங்களுக்கு வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும்.

pray1
- Advertisement -

தெய்வ வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என்று இரண்டு வழிபாடுகள் உள்ளன. குலதெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாக பின்பற்றப்படும் வழிபாடாகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள் மனதுக்கு பிடித்தமான தெய்வத்தை வழிபடுவதாகும். இஷ்ட தெய்வத்தை முறையாக வழிபட எவ்வாறான பூஜைகளை எப்படி செய்தால் தெய்வத்தின் அருளை முழுமையாக பெற முடியும் என்பதைப் பற்றியே இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

praying-god

இன்றைக்கு பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால் “அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் பல தெய்வங்களை வணங்குவதை விட ஏதேனும் ஒரு தெய்வத்தை பக்தியுடன் ஒருமித்த முழுமனதாக வணங்கி வருவது சிறந்த பலனை கொடுக்கும். ஒவ்வொருவரும் அம்மன், சிவன், ஆஞ்சநேயர், முருகன் என்று ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுகின்றனர். ஒவ்வொரு தெய்வத்திற்கென்றும் தனித்தனி சிறப்பு வழிபாடுகள் உள்ளன. அவற்றினை முறையாக செய்யும் பொழுதுதான் முழுமையான பலனை பெற முடியும்.

- Advertisement -

விநாயகர் வழிபாடு:
எந்தவொரு காரியங்கள் துவங்குவதாக இருந்தாலும் முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கி தான் துவங்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள். அப்படி இருக்கும் விநாயகரை இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றென்றும் வாழ்வில் ஏற்றம் தான். விநாயகரை அனுதினமும் தொழலாம். தும்பை மற்றும் அருகம்புல் வைத்து அவல் பொரி மற்றும் மோதகம் நெய்வேத்தியமாக படைத்து வணங்கினால் விநாயகரின் அருளைப் முழுமையாக பெற முடியும். சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து விநாயகரை வழிபட்டு வருவதும் சிறந்த பலனைக் கொடுக்கும்.

pillayar

முருகன் வழிபாடு:
ரத்தம், யுத்தம், சகோதர உறவு ஆகியவற்றிற்கு உரித்தானவர் செவ்வாய். அவருக்கே அதிபதியாக இருக்கும் முருகனை வழிபட்டு வந்தால் உறவுகள் மேம்படும். சகல காரியங்களிலும் ஜெயம் உண்டாகும். வந்த வினையும் வருகின்ற வல்வினையும் விலகியோடும். முருகனை செவ்வாய்க்கிழமை தோறும் பஞ்சாமிருதம் அல்லது சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி வந்தால் பரிபூரண அருள் கிடைக்கும். ஐப்பசி சஷ்டி மற்றும் மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை வழிபட்டு வருவது சிறந்த பலனை கொடுக்கும்.

- Advertisement -

ஸ்ரீ துர்கா தேவி வழிபாடு:
பக்தர்களின் பிரச்சனைகளை நீக்கி வெற்றிகளை அருள்பவர் துர்கா தேவி. விநாயகருக்கு தாயாகவும், சித்தர்களுக்கு தலைவியாகவும் இருக்கும் துர்கா தேவியை வணங்கி வர பசி, தாகம், சோம்பல், பிரமை நீங்கி, மகிழ்ச்சி, செல்வம், வீரம் போன்றவற்றைப் பெற முடியும். துர்கா தேவியை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் குங்குமம் மற்றும் செந்நிற பூக்கள் வைத்தும் சக்கரை பொங்கல் அல்லது பழங்களை நைவேத்தியமாக படைத்தும் பூஜை செய்து வந்தால் தேவியின் அருள் முழுவதுமாக கிடைக்கும். பஞ்சமி தேவி பூஜை அன்று விரதமிருந்து வழிபாடு மேற்கொள்வது மிகவும் விசேஷமாகும்.

durga

ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு:
உலக வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது செல்வம். செல்வத்திற்கு அதிபதியாகவும் அதனை அள்ளித் தருபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி. மகாலட்சுமி தேவியை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தால் மன சலனங்கள் நீங்கி, வீரம், தைரியம், செல்வம், பிள்ளைச் செல்வம் போன்றவற்றை வரமாக அளிப்பாள். வெள்ளிக்கிழமைதோறும் துளசி மற்றும் வில்வம் வைத்து ஏதேனும் ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக படைத்து வணங்கி வருவது மகாலட்சுமிக்கு உகந்ததாகும். ஏகாதேசி மற்றும் கார்த்திகை மாத ஸ்ரீ பஞ்சமியில் விரதமிருந்து வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.

mahalashmi3

இவர்களில் எவரேனும் ஒருவர் உங்கள் இஷ்ட தெய்வமாக இருப்பின் அவரை முறையாக வணங்கி உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -