இந்த 5 பொருட்களை கடன் வாங்கினால் நடக்க இருக்கும் ஆபத்தை உங்களால் தடுக்க முடியாது தெரிந்து கொள்ளுங்கள்.

kerchief-cash

கடனாக மற்றவர்களிடத்தில் இருந்து நாம் வாங்கும் ஒரு சில பொருட்களினால் நமக்கு தரித்திரம் வந்து சேரும். இந்த சில பொருட்களினால் நமக்கு நிறைய தீமைகள் மற்றும் தரித்திரம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளனவாம். குறிப்பாக இந்த ஐந்து பொருட்களை நாம் கடனாக பெறுவதன் மூலம் வறுமை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியாக எந்த பொருட்களை நாம் கடனாக பெறக்கூடாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

hand-kerchief

முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் உபயோகிக்கும் ‘கர்ச்சீஃப்’ அதாவது கைக்குட்டை. திடீரென அவசர தேவைக்கு சற்றும் யோசிக்காமல் மற்றவர்களிடமிருந்து கைக்குட்டையை கடனாகப் பெற்று விடுகிறோம். அடுத்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டையை நாம் பயன்படுத்துவதால் நமக்கு தரித்திரம் வந்து சேரும். இது ஆரோக்கிய ரீதியாகவும் கிருமி பாதிப்பை உண்டாக்கும் என்பதால் கைக்குட்டை கடனாக வாங்குவதை எந்த விதமான அவசர சூழ்நிலையிலும் தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலானோர் கை கடிகாரத்தை பரிசுப் பொருளாகவும், நண்பர்களுக்கு கடனாகவும் கொடுக்கும் பழக்கம் வைத்திருக்கலாம். கை கடிகாரத்தை எக்காரணம் கொண்டும் கடனாக வாங்க கூடாது. ஒருவர் பயன்படுத்திய கை கடிகாரத்தை மற்றவர்கள் அணிந்து கொள்வது அவர்களுக்கு வறுமை உண்டாகும்.

watch

ஒருவர் இடத்திலிருந்து எழுதும் பேனாவை கடனாக பெறுவது கூட தரித்திரத்தை உண்டாக்கும். கடனாக வாங்கும் பேனா பெரும்பாலும் திருப்பிக் கொடுப்பதில்லை. இதனால் கொடுத்தவருக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்படும். பேனாவை வாங்குவதன் மூலம் நமக்கு நாமே சூனியத்தை வைத்துக் கொள்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். பேனா கடன் வாங்குவது வறுமைக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதைவிட மிக முக்கியமாக ஒருவரிடமிருந்து நாம் பணத்தை கடனாக வாங்கவே கூடாது. பணத்தை கடன் வாங்குவது மிக மிக சுலபம். ஆனால் அதை திருப்பிக் கொடுப்பது என்பது அதை விட பல மடங்கு கடினமான ஒரு காரியம். நம் தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டால் அதை எப்படி கட்டுவது? என்கிற மன உளைச்சல் தரித்திரத்தை ஏற்படுத்தும். இந்த செயல்கள் வீட்டில் வறுமை நிலையை ஏற்படுத்தி விடும். ஒருவரிடமிருந்து நாம் கடனாகப் பெற்றுக் கொள்ளும் பணம் அவர்களுடைய துரதிருஷ்டம் சேர்த்து தான் நமக்கு தருமாம். இதனால் தான் பெரும்பாலும் கடனாக வாங்கிய தொகையை கட்ட முடியாமல் பரிதவிக்கும் நிலை உருவாகிறது.

green pen

இது போல் நண்பர்கள் அல்லது சகோதர, சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது உடைகளை கடனாக கொடுப்பதும் பெற்றுக் கொள்வதும் சகஜமான ஒன்று. இப்படி ஒருவருடைய உடையை மற்றவர்கள் போடுவது கூட ஆபத்தை ஏற்படுத்துமாம். ஒருவர் பயன்படுத்திய உடையை மற்றவர்கள் பயன்படுத்துவது வீட்டில் செல்வ செழிப்பை குறைக்குமாம்.

bed-room

அது போல் ஒருவரின் படுக்கையை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்வது என்பது செய்யக்கூடாத செயல் ஆகும். உங்கள் துணை மற்றும் குழந்தைகளை தவிர உங்களுடைய படுக்கையில் மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது. இதனால் மிகப் பெரும் ஆபத்துக்களை வீட்டில் சந்திக்க நேரலாம். இதனால் தரித்திரம் ஏற்பட்டு செல்வ நிலை குறைந்து வறுமை உண்டாக கூடும். இது போன்ற சில விஷயங்களை கடனாக கொடுக்கவும் கூடாது, நாம் பெற்றுக் கொள்ளவும் கூடாது என்பதை மட்டும் கவனமாக கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பெருக இதெல்லாம் தான் காரணம்! அவற்றை நீக்க என்ன செய்யனும்னு தெரிஞ்சிக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.