உங்கள் தோட்டத்தில் பூக்கள் பூத்து குலுங்க, காய்கறிகள் கொத்து கொத்தாக காய்க்க, இனி நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டாம். வாங்க அது எப்படின்னு பாக்கலாம்.

- Advertisement -

இப்போதெல்லாம் வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் பெருமளவு அதிகரித்து வருகிறார்கள் வீட்டிலே ஒன்று, இரண்டு செடி ஆசைக்கு வைத்திருப்பவர்களும் உண்டு மாடித் தோட்டம் அமைத்து கொஞ்சம் பெரிய அளவில் வளர்ப்பவர்களுக்கு உண்டு. இன்றைய தலைமுறைகள் மாடி தோட்டம் வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி ட்டி வருகிறார்கள். ஆனால் என்ன? செலவு செய்து செடிகள் வாங்கி வளர்ப்பது காட்டிலும் உரங்களை வாங்க அதிக செலவு செய்து வளர்க்கிறார்கள். மற்ற செலவுகளை தவிர்க்க முடியாமல்போனாலும் கூட இந்த உரத்திற்கான செலவையாவது மிச்சப்படுத்த நாம் என்ன செய்வது என்பதை பற்றிய பதிவு தான் இது.

முதலில் இந்த உரம் வாங்க செலவு பண்ண வேண்டாம் என்ற ஒரு எண்ணத்தோடு உரங்களை தயாரிக்காமல் இப்படியான உரங்கள் மூலம் கெமிக்கல் இல்லாமல் நல்ல இயற்கையான முறையில் அதிக சத்துக்கள் நிறைந்த உரத்தை கொடுக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி இத்தகைய உரங்களின் மூலம் வரக்கூடிய காய்கறி செடிகளில் இருந்து கிடைக்கும் காய்கறிகளானது நமக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தரும் இதை கருத்தில் கொண்டு இந்த உரங்களை நீங்கள் எப்படி காசு கொடுத்து வாங்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் காய்கறி கழிவு. இதை பெரும்பாலும் எல்லோரும் ஒரு பக்கெட்டிலோ அல்லது டப்பிலோ காய்கறி கழிவுகளை போட்டு தண்ணீர் ஊற்றி நுரைக்க வைத்து அந்த தண்ணீருடன், தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றுவார்கள் எந்த முறை எல்லோரும் சுலபமாக செய்ய கூடியது தான்.

இதில் இந்த கழிவுகளை நன்றாக காய வைத்து டீ கம்போஸ்ட் முறையில் உரங்களை, உரம் மண் போல தயார் செய்து அதை செடிகளுக்கு போடுவதன் மூலம் அதிக சத்து செடிகளுக்கு கிடைக்கும். செடியும் நன்றாக வளரும்.

- Advertisement -

இது மட்டும் இன்றி வீட்டில் மாடித் தோட்டம் இல்லாமல் தரையில் செடி வைத்திருப்பவர்கள் அந்த செடி மரங்களை சுற்றிலும் சிறு சிறு பள்ளங்கள் தோண்டி இந்த காய்கறி கழிவுகளை நேரடியாக அதில் சேர்த்து மணல் வைத்து மூடி விட்டு விடலாம். தண்ணீர் ஊற்ற ஊற்ற அந்த உரங்கள் மண்ணோடு மண்ணாக மக்கி நல்ல ஒரு மண்ணாக மாறி செடிகள் அத்தனை சத்துக்களை இந்த கழிவுகள் கொடுக்கும்.

இதையெல்லாம் செய்ய முடியாதவர்கள், இப்படி காய்கறி கழிவுகள் கிடைக்கும் போது அதை மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு அத்துடன் சாணம் கிடைத்தால் அதை சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் நாட்டு சர்க்கரை மட்டும் இருந்தால் போதும். சாணம் பெரும்பாலும் அனைவருக்கும் கிடைப்பதில்லை நாட்டு சர்க்கரை கலந்து கொள்ளுங்கள். நீங்கள் கலந்த உரத்திற்கு மூன்று பாங்கிலிருந்து நான்கு அல்லது ஐந்து பங்கு வரை தண்ணீர் வைக்கலாம். அதை அப்படியே செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

- Advertisement -

இதை போல் வீட்டில் தேவையில்லாமல் குப்பையில் தூக்கி எறியும் எந்த காய்கறி கழிவுகளை நீங்கள் சரியாக பயன்படுத்தினாலே போதும். செடிகளுக்கு உரம் வாங்க வேண்டிய செலவு இல்லை. அவ்வப்போது பூச்சி வராமல் இருக்க வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை ஊற வைத்த தண்ணீர் போன்றவை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தெளித்து விட்டாலே போதும் பூச்சி வைக்காது.

தேங்காய் நார் உரம் சுலபமாக இதையும் நாம் வீட்டிலே தயாரிக்கலாம். தேங்காய் நாரை நான்கு நாட்கள் வரை தண்ணீரில் போட்டு பின்னர் வடி கட்டி எடுத்தாலே போதும். தேங்காய் நார் உரம் தயாராகி விடும். அதை ஊற வைத்த தண்ணீரை கூட வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றி விடலாம். இந்த தேங்காய் நார் உரம் இன்னும் பல முறைகளில் தயாரிக்கலாம் ஆனால் எடுத்து நாம் சுலபமாக வீட்டில் இப்படியும் தயார் செய்து செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

அதே போல டீ தூள், முட்டை ஓடு , அரிசி பருப்பு களைந்த தண்ணீர் என சமையலையில் நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கும் அனைத்துமே நல்ல உரங்கள் தான். இவற்றை எல்லாம் முறையாக பயன்படுத்தினாலே போதும் நீங்கள் உரம் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் துளசி செடி வாடி போய் விட்டதே என்று நீங்களும் வாடி விடாதீர்கள். பத்து ரூபாய் செலவு செய்யுங்கள் போதும் உங்கள் துளசி செடி வளரும் ஆச்சரியத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள்.

இந்த சிறு சிறு குறிப்புகளை தெரிந்து கொண்டு வீட்டில் நீங்கள் ஆசை பட்டு வளர்க்கும் செடிகளுக்கு இந்த முறையில் குறைந்த செலவில் நல்ல முறையில் செடி காய்கறிகளை வளர்த்து பயனடையுங்கள்.

- Advertisement -