ஜென்ம சனி சனியால் நன்மைகள் பெற பரிகாரம்

janma sani pariharam in tamil
- Advertisement -

ஒவ்வொரு முறை சனி கிரக பெயர்ச்சி ஏற்படும் பொழுதும், ஒவ்வொரு ராசியினரும் தங்களுக்கு எந்த வகையான சனிப்பெயர்ச்சி ஏற்பட போகிறது என கவனிப்பார்கள். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி, விரய சனி, பாத சனி என பல வகை சனி பெயர்ச்சி காலங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஜென்ம சனி ஏற்படும் காலத்தில் ஒருவர் செய்து கொள்ள வேண்டிய ஜென்ம சனி பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜென்ம சனி பரிகாரம்

பொதுவாக ஜென்ம சனி பீடிக்கப்பட்டவர்கள், அந்த சனிபகவானின் தாக்கத்தால் கெடு பலன்கள் ஏற்படாமல் வாழ்வில் நன்மைகள் ஏற்பட வழிபட வேண்டிய தெய்வமாக இருப்பவர் ஆஞ்சநேயர். ஜென்ம சனி நடைபெறுபவர்கள் தினந்தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது அவசியம். மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று, அனுமனுக்கு இருக்கும் எருக்கம் பூ மாலை சாற்ற வேண்டும். செந்தூரம் சாற்றி அனுமனை வழிபடுவதும் நன்மை தரும்.மேலும் அனுமனுக்கு தீபங்கள் ஏற்றி, அனுமன் சாலிசா துதித்து வருவதாலும் ஜென்ம சனி காலத்தில் கெடுதியான பலன்கள் அதிகம் ஏற்படாமல் தடுக்கும்.

- Advertisement -

தினந்தோறும் காலையில் உணவு உண்பதற்கு முன்பாக காகங்களுக்கு உணவு வைத்த பிறகு உண்பதால் ஜென்ம சனி காலத்தில் சனி பகவானின் கடுமையான தாக்கம் குறைந்து நன்மைகள் ஏற்படும். ஜென்ம சனி நடைபெறும் காலம் முழுவதும் வறிய நிலையில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. உணவகங்களில் இருந்து வாங்கி வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பதை காட்டிலும், தங்கள் வீட்டிலேயே சமைத்து தயாரிக்கப்பட்ட உணவுகளை ஏழை மக்களுக்கு தானம் செய்வதே புண்ணிய பலன்களை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜென்ம சனி நடைபெறும் சமயத்தில் அந்த நபர்கள் எக்காரணம் கொண்டும் மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றை செய்யக்கூடாது. இந்த பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இத்தகைய செயல்கள் சனி பகவான் சாபத்தை பெற்று தருவதோடு ஏற்கனவே இருக்கின்ற கஷ்டங்கள் மேலும் அதிகரிக்க வழிவகை செய்யும்.

- Advertisement -

ஜென்ம சனி காலத்தில் கருப்பு எள், கடுகு எண்ணெய் போன்றவற்றை கோயில்களுக்கோ அல்லது ஏழ்மை மணி நிலையில் இருப்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் கருப்பு நிற ஆடைகள் அல்லது போர்வைகளை ஏழை முதியவர்களுக்கு தானம் செய்வதும் ஜென்ம சனி காலத்தில் சனி பகவானின் நல்லருளை பெற்றுத்தரும்.

பல தெய்வீக சக்திகளை தன்னுள்ளே கொண்ட ஒரு விலங்காக குதிரை விளங்குகிறது. அந்த குதிரையின் காலில் அடிக்கப்படுகின்ற லாடம் என்பது எதிர்மறை ஆற்றல்களை விலக்கும் சக்தி கொண்டதாகும். எனவே ஜென்ம சனி காலத்தில் குதிரையின் காலில் அடிக்கப்பட்டு தேய்ந்து விழுந்த குதிரை லாடம் ஒன்றை கொண்டு வந்து வீட்டின் முன்பாக மாட்டி வைப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: ராகு தோஷம் பரிகாரம்

சனிக்கிழமைகளில் இனிப்பு லட்டுகளை வீட்டிலேயே தயார் செய்து, அதை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதும் சனிபகவானின் நல்லருளை பெற்றுத் தந்து, ஜென்ம சனி காலத்தில் கெடுதியான பலன்கள் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -