குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருளை உங்க செடிக்கு போடுங்க. மில்லியன் கணக்கில் மல்லிப்பூ பூத்துக் குலுங்கும். பறிக்க இரண்டு கை போதாது.

plant
- Advertisement -

ஆசை ஆசையாக மல்லிப்பூ பூப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காக செடியை வாங்கி வைப்போம். ஆனால் செடி தளதளவென அழகாக துளிர் விட்டு வளரும். ஒரு மொட்டு கூட விடாது. இப்படி பூக்காத மல்லிகை பூச்செடிகளை பூக்க வைக்க உரங்கள் நமக்கு கடைகளில் கிடைக்கின்றது. ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சம் காசு செலவு செய்ய வேண்டும். அதற்கு பதில் உங்களுடைய வீட்டில் எலுமிச்சம்பழத் தோல் இருக்கும் அல்லவா அதை குப்பையில் தானே போடுவீங்க. போடாதீங்க, இனிமே இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. எலுமிச்சை பழ தோலில் இருக்கும் அமிலத்தன்மை உங்களுடைய மல்லி பூ செடியில் கொத்து கொத்துக்களாக மொட்டுகளை வைக்கும். கொத்துக்கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்க செய்யும். எண்ணி ஒரு மாதத்தில்.

கொத்து கொத்தாக மல்லிகை பூ பூக்க சூப்பர் ஐடியா:
ஐந்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி பயன்படுத்தி இருப்பீர்கள். ஆக, மொத்தத்தில் வெட்டிய எலுமிச்ச பழத்தோல் 10 இருக்க வேண்டும். அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, நறுக்கிய இந்த எலுமிச்சம் பழத்தோல்களை அதில் போட்டு மூடி போட்டு, குலுக்கி இதை நிழலில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மூன்று நாட்கள் இது அப்படியே நிழலில் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை அல்லது நான்கு முறை இந்த பாட்டிலை எடுத்து குலுக்கி அதே இடத்தில் வைத்து விடுங்கள். 3 நாட்கள் கழித்து இந்த தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் தோல் திப்பியை குப்பையில் போட்டு விடுங்கள்.

1 லிட்டர் அளவு தண்ணீர் நம்மிடம் இருக்கிறது. இந்த தண்ணீரில் 2 லிட்டர் அளவு சாதாரண தண்ணீரை ஊற்றி கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி இதை உங்களுடைய செடியின் இலைகள் கிளைகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். வேர் பகுதியில் ஸ்பிரே செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வேர்ப்பகுதியில் நிறைய எறும்பு இருந்தால் மட்டும் அந்த இடத்தில் கொஞ்சம் ஸ்பிரே செய்து விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீர் அமிலத்தன்மை கொண்ட தண்ணீர். நிறைய மொட்டுக்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் செடியில் எறும்புகள் வராமலும் இருக்கும். இந்த வாசனைக்கு எறும்புகள் இருந்தாலும் அது நிச்சயம் செடியை விட்டு போய்விடும். எறும்பு புத்துகள் உள்ள இடத்தில் கூட நீங்கள் இந்த ஸ்ப்ரேவை அடித்துக் கொள்ளலாம்.

மாதத்திற்கு ஒருமுறை இந்த தண்ணீரை உங்கள் செடிகளுக்கு கொடுங்கள் போதும். நன்றாக செடிகள் பூத்துக் குலுங்க தொடங்கி விட்டால் வேறு ஏதாவது உரத்தை உங்கள் செடிகளுக்கு நீங்கள் இயற்கையாகவே கொடுத்து வரலாம்.

இதையும் படிக்கலாமே: பூச்செடிகளை அழிக்கும் பூச்சிகளை எளிதாக விரட்ட 10 பைசா செலவில்லாமல் இயற்கையாக வீட்டிலேயே இதை செய்யலாமே! வேர் முதல் நுனி வரை ஒரு பூச்சியும் அண்டாது!

ரோஜா செடிகளுக்கும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம். தவறு கிடையாது. உங்களுக்கு பயமாக இருந்தால் ஒரே ஒரு சின்ன செடியில், ஒரே ஒரு கிளையில் மட்டும் இதை ஸ்பிரே செய்து பாருங்கள். ஒரு மாதத்தில் அந்த பூச்செடி எப்படி வளர்கிறது என்பதை கவனித்து விட்டு பிறகு எல்லா செடிகளுக்கும் அடித்துக் கொள்ளுங்கள். இந்த பயனுள்ள குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா கட்டாயம் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -