பூச்செடிகளை அழிக்கும் பூச்சிகளை எளிதாக விரட்ட 10 பைசா செலவில்லாமல் இயற்கையாக வீட்டிலேயே இதை செய்யலாமே! வேர் முதல் நுனி வரை ஒரு பூச்சியும் அண்டாது!

karpooravalli-rose-plant
- Advertisement -

பூச்செடிகள் என்றாலே அதில் விதவிதமான பூச்சிகளும் ஒன்றிக் கொண்டிருப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும், பூச்செடிகளின் வளர்ச்சியை இது தடை செய்யக் கூடியது என்பதால் இவற்றை விரட்டி அடிக்க வேண்டி உள்ளது. பத்து பைசா செலவில்லாமல், செயற்கை உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் வீட்டிலேயே எப்படி பூச்செடிகளில் இருக்கக் கூடிய பூச்சிகளை எளிதாக விரட்டி அடிப்பது? என்பதை தான் இந்த தோட்ட குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடி, மல்லி செடி, முல்லை செடி என்று எல்லா வகையான பூச்செடிகளும் வாசம் மிகுந்த மலர்களை நமக்கு அள்ளிக் கொடுக்கின்றன. இந்த மலர்களுக்கு இடையே நுண்ணிய உயிர்களும் சில சமயங்களில் தோன்றி விடுகிறது. இவை வேர் முதல் நுனி வரை உள்ள எல்லா பகுதிகளையும் அரித்து தின்று விடக் கூடிய அபாயம் உண்டு. இதனால் பூச்செடிகள் பூக்க முடியாமல் செத்து மடிந்து விடும்.

- Advertisement -

ஆரம்பத்திலேயே இவ்வகையான பூச்சிகளை விரட்டி அடித்து விட்டால் அல்லது வராமல் தடுத்து விட்டால் நம்முடைய பூச்செடிகள் நன்கு பூத்துக் குலுங்கும். இதற்கு செயற்கை ரசாயனங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது உண்டு அப்படி அல்லாது போனால் வேப்ப எண்ணையை முறையாக ஸ்ப்ரே செய்து பராமரித்து வரலாம். நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய காரத்தன்மை உள்ள செடிகளில் துளசி மற்றும் கற்பூரவள்ளி இலைகள் நல்ல ஒரு பூச்சிக்கொல்லியாக செயல்படும். துளசியை விட கற்பூரவள்ளியில் காரத்தன்மை அதிகம்.

இந்த கற்பூரவள்ளி இலைகளை 15 எடுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இரண்டு லிட்டர் தண்ணீரில் நன்கு இதை கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை நீங்கள் எல்லா வகையான பூச்சொடிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒவ்வொரு மக்கில் எடுத்து வேரில் நன்கு ஊற்றிக் கொள்ளுங்கள். பூச்சிகள் பெரும்பாலும் வேரை தாக்குவதாக இருந்தால் இந்த ஒரு இயற்கை உரம் நல்ல ஒரு நிவாரணம் கொடுக்கும்.

- Advertisement -

வேரில் இருந்தே செடியை பாதுகாத்து, இலைகள் அரிப்பதை தடுத்து பூக்களை நன்கு பூக்க செய்யும். கற்பூரவள்ளி இலையில் இருக்கக்கூடிய காரத்தன்மை மற்றும் மஞ்சள் தூளில் இருக்கக் கூடிய நெடி இவை இரண்டும் பூச்சிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் பூச்செடிகளில் கண்ணுக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டிருக்கும் நுண்ணிய பூச்சிகளும் கூட நம் செடியை விட்டு ஓடிவிடும்.

இதையும் படிக்கலாமே:
என்னங்க கொத்தமல்லி செடியை எப்படி வெச்சாலும் வரமாட்டேங்குதா? இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க. மூணே நாளில் கொத்தமல்லி செடி கிடுகிடுவென காடு போல வளர ஆரம்பிக்கும்.

பூச்செடிகள் மட்டுமல்ல அது நம் வீட்டில் இருக்க கூடிய எல்லா வகையான பூச்சிகள் இருக்கக்கூடிய செடிகளுக்கும் இதை நீங்கள் ஸ்பிரே செய்து விடலாம். வேரிலும் ஆகாரமாக கொடுத்து வரலாம். குறிப்பாக ரோஜா செடிகளில் இருக்கக்கூடிய எல்லா வகையான பூச்சிகளையும் விரட்டி அடிக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் இதற்கு உண்டு. எனவே வீட்டிலேயே இதை எளிமையான முறையில் தயார் செய்து வாரம் ஒரு முறை கொடுத்து வாருங்கள். உங்களுடைய பூச்செடிகளுக்கு பூச்சிகளிடமிருந்து குட் பை சொல்லுங்கள்.

- Advertisement -