ஜீரண பிரச்சினை சரியாக, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க இப்படி அரைத்து வைத்த ரசத்தை உங்கள் வீட்டில் நீங்களும் செய்து சாப்பிடுங்கள்

rasa-podi-rasam
- Advertisement -

கையில் 5 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது முன்னோர்களின் கூற்று. அதாவது நாம் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து இருந்தாலும் அந்த விஷத்தை முறிக்க இந்த மிளகை வாயில் போட்டு மென்றால் போதும் என்று அர்த்தமாகும். அவ்வாறு விஷத் தன்மையும் அழிக்க வல்ல ஆற்றல் பெற்றது தான் இந்த மிளகு. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கும் அஜீரண கோளாறு, உடல் சோர்வு போன்றவற்றை எளிதில் அகற்ற முடியும். இப்படி உடல் சோர்வை அகற்றும் சுவையான ரசத்தை இவ்வாறு மசாலா அரைத்து வைத்துப் பாருங்கள். சுட சுட சாதத்துடன் இந்த ரசத்தை ஊற்றி சாப்பிட அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சம்பழ அளவு, சின்ன வெங்காயம் – 3, தக்காளி – 2, கடுகு – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 7 பல், துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், சீரகம் – 2 ஸ்பூன், மிளகு – ஒன்றரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் தனியா சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், அடுத்ததாக 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவேண்டும். அதனை அடுத்து ஒன்றரை ஸ்பூன் மிளகு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வறுக்க வேண்டும். பிறகு இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு 3 வெங்காயம், ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாகக் கிளறி விடவேண்டும். பின்னர் இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து= சிறிதளவு தண்ணீர் ஊற்றி சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் 2 தக்காளியை நன்றாகக் கரைத்துக் கொண்டு புளித்தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அதன்பின் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை எண்ணெயில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

இந்த மசாலா லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கலந்து வைத்துள்ள புளி கரைசலை இவற்றுடன் சேர்க்க வேண்டும். பின்னர் 7 பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்கவேண்டும். இவை லேசாக குதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும். ஒருமுறை இந்த சுவையான ரசம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.இதன் மனமும், சுவையும் உங்கள் நாவில் எச்சில் ஊற ஆரம்பிக்கும்.

- Advertisement -