ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

Jansi-rani

பெண்களின் வீரத்தினை வெளிக்காட்டியவர் தான் இந்த மாபெரும் வீரப்பெண்மணி “ஜான்சி ராணி”. பொதுவாக பெண்கள் வீரத்தினை வெளிக்காட்டுவது இல்லை அதுவும் ஜான்சி ராணி வாழ்ந்த காலங்களில் பெண்களை ஆண்கள் அடக்கியே வைத்திருந்தனர். அந்தக்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்மணியான ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

jhansi-1

ஜான்சி ராணி பிறப்பு :

ஜான்சி ராணி இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி [தற்போதைய வாரணாசியில்] மராத்திய பிராமண குடும்பத்தில் மெளரியபந்தர் மற்றும் பகீரதிபாய் என்ற தம்பதிக்கு நவம்பர் 19 1828ஆம் ஆண்டு மகளாய் பிறந்தார். இவருக்கு அவர்களது பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா . இவரை அவர்களது குடும்பத்தினர் அன்பாக “மனு”என்றழைத்தனர்.

இயற்பெயர் – மணிகர்ணிகா
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – நவம்பர் 19 1828
பெற்றோர்கள் – மெளரியபந்தர், பகீரதிபாய்
பிறந்த ஊர் – காசி [வாரணாசி], உத்திரபிரதேசம்
செல்லப்பெயர் – மனு

இளம்வயது மற்றும் திருமணவாழ்க்கை :

இவரது 4ஆம் வயதிலேயே இவரது தாய் பகீரதிபாய் இறந்துவிட்டார் எனவே தந்தையின் அரவணைப்பிலே வளர்ந்தார் ஜான்சி ராணி. சிறு வயது முதலே போர்புரியும் ஆசையோடு வாள்வீச்சு மற்றும் குதிரைஏற்றம் போன்ற போர்க்கலைகளை கற்றுக்கொண்டார். அதோடு அவருக்கு இயற்கையாகவே அவரிடம் போர்க்குணம் நிறைந்து காணப்பட்டதால் அவர் அனைத்து பயிற்சிகளையும் முறைப்படி கற்றுக்கொண்டார்.

- Advertisement -

jhansi-3

ஜான்சி ராணியின் தந்தை அவருக்கு திருமணம் செய்யும் நோக்கில் அவரை 1842ஆம் ஆண்டு அப்போது ஜான்சியினை ஆண்டுகொண்டிருந்த மன்னர் “ராஜா கங்காதர ராவ் நெவல்கர்” அவருக்கு தனது மகளான மணிகர்ணிகாவை திருமணம் செய்துவைத்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை ஆண் பிறந்தது. அவனது பெயர் தாமோதர் ராவ் ஆனால் பிறந்த நான்கு மாதங்களில் அந்த குழந்தை இறந்தது. அதன் பின்னர் அவர்கள் ஒரு குழந்தையினை தத்தெடுத்து அதற்கு தாமோதரராவ் என்று பெயர் சூட்டி வளர்த்தனர்.

மணிகர்ணிகா ஜான்சி ராணியாக மாறினார் :

மணிகர்ணிகா ஜான்சி மன்னரை மணந்ததும் அவருக்கு “லட்சுமிபாய்” என்ற சிறப்பு பட்டம் கிடைத்தது. மேலும் அவர் ஜான்சியின் ராணியாக அரியணையில் அமர்ந்தார் . அன்றிலிருந்து அவருடைய இயற்பெயரான மணிகர்ணிகா மறைந்து “ஜான்சி ராணி லட்சுமிபாய்” என்றானது. மகனின் இறப்பு மன்னருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1853ஆம் ஆண்டு மன்னரும் உடல்நலம் பாதித்து இறந்தார்.

கோட்டையை விட்டு வெளியேறிய ஜான்சி ராணி :

மன்னன் இறந்ததும் ஆங்கிலேயர்கள் ஜான்சி ராணியை கோட்டையை விட்டு வெளியேற சொன்னார்கள். ஆனால் ஜான்சி ராணி கூறினார் என் மகன் இருக்கும்போது நான் ஏன் கோட்டையை விட்டு வெளியேற வேண்டும் . இவனே இந்த ஜான்சிக்கு அரசன் எனவே நான் கோட்டையினை விட்டு வெளியேற முடியாது என்று அவர்களிடம் முறையிட்டார்.

jhansi-2

ஆனால் , அதற்கு ஆங்கிலேயர்கள் தாமோதராவ் உங்களின் வளர்ப்பு மகன். சட்டப்படி அரச வாரிசு தான் மன்னராக ஏற்றுக்கொள்ளப்படுவார். வளர்ப்பு மகன் அரசனாக முடியாது என்று கூறி 60000 ருபாய் ஓய்வூதியமாக அளித்து அவரை கோட்டையை விட்டு வெளியேற சொன்னார்கள்.பிறகு கோட்டையை விட்டு வெளியேறிய ஜான்சி ராணி அங்குள்ள ராணி மஹாலில் தங்கினார்.

இந்திய கிளர்ச்சி :

1857ல் இந்திய கிளர்ச்சி ஏற்பட்டது அதன் முதன் காரணம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைவரும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அந்த சமயம் அவர்கள் ஜான்சி ராணியினை பற்றி அதிகம் யோசிக்க வில்லை .

அவர்கள் கோட்டையை விட்டு வெளியேற சொன்ன அந்த தருணத்தில் இருந்து அவருக்கு ஆங்கிலேயர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணம் தோன்றியது. இதனால் தனது ஆதரவாளர்களை தேடி சென்று சேர்த்தார் . தனது படை பலத்தினை அதிகரித்து கொண்டு போருக்காக காத்துக்கொண்டிருந்தார்.

குவாலியரை கைப்பற்றிய ஜான்சி ராணி :

பிறகு 1958ஆம் ஆண்டு தனது மகன் தாமோதர ராவ் மற்றும் தனது ஆதரவு படைகளுடன் குவாலியருக்கு படையெடுத்த ஜான்சி ராணி குவாலிய மன்னனை வீழ்த்தி குவாலியரை தன் வசப்படுத்தினார். அந்த போரில் ஜான்சி ராணியின் வாள் வீசும் வேகத்தினை கண்ட படைவீரர்கள் அவரை நெருங்க பயந்தனர். ஒரு பெண் எவ்வளவு லாவகமாக வாள் வீசுகிறார் என்று குவாலிய மன்னன் திகைத்தான் .முடிவில் போரில் குவாலிய மன்னனை கொன்று குவாலியரை தன் வசப்படுத்தினார்.

jhansi-4

வீர மரணம் அடைந்த ஜான்சி ராணி :

பிறகு ஆங்கிலேய இராணுவம் குவாலியரை கைப்பற்ற தங்களது மிகப்பெரிய படையுடன் குவாலியரை நோக்கி படையெடுத்தது. அப்போது அந்த போரில் ஆண் வேடம் சித்தரித்து தொடர்ந்து சண்டையிட்டு போராடினார். ஆனால் பெரிய ஆயுதப்படையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக இவரால் சண்டைபோட்டு சமாளிக்க முடியாமல் எதிரிகளின் படை மூலம் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

ஜான்சி ராணி 1858ஆம் ஆண்டு ஜூன் 18 ல் வீரமரணம் அடைந்தார். அவர்கள் கொன்றது ஜான்சி ராணிதான் என்பது தெரியாமல் அவர்கள் குவாலியரை போரிட்டு கைப்பற்றினர். பிறகு ஜான்சி ராணியின் உடல் குவாலியரின் அருகில் தகனம் செய்யப்பட்டது.

ஜான்சி ராணி இறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூன் 18, 1858

ஜான்சி ராணியின் நினைவு :

ஜான்சி ராணி மறைந்து ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் அவரின் வீரம் இந்திய மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி புத்தகத்தில் வரலாறு பகுதியில் ஜான்சிராணி பற்றிய பாடம் இடம் பெற்று வருகிறது. மேலும் இந்தியா முவழுவதும் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. வீரத்தினை தந்துவிட்டு சென்ற வீரமங்கை ஜான்சி ராணி .

English Overview:
Here we have Jhansi Rani biography in Tamil. Above we have Jhansi Rani history in Tamil. We can also say it as Jhansi Rani varalaru in Tamil or Jhansi Rani essay in Tamil or Jhansi Rani Katturai in Tamil.

ராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்