விரைவில் வேலை கிடைக்க பரிகாரம்

job

உழைப்பதற்காவே பிறந்த இனம் மனித இனம் என்று சொல்லலாம். ஒருவனுக்கு செல்வத்தை கொடுக்கும் எந்த ஒரு வேலையோ அல்லது பணியோ உயர்வானது தான். நமது இந்திய மக்கள் தொகையோ 120 கோடிகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. வருடந்தோறும் அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ இருக்கின்ற நூற்றுக்கணக்கான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கின்ற நிலை இங்கு இருக்கிறது. தகுதிக்கேற்ற வேலை கிடைக்க நமது முயற்சியுடன், இறைவனின் ஆசிகளும் வேண்டும். அப்படி தெய்வ அருளை பெற்று நீங்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்கான எளிய பரிகாரங்கள் இதோ.

interview

வேலை கிடைக்க பரிகாரம்

புதிதாக வேலை தேடி முயற்சிப்பவர்களோ அல்லது ஏற்கனவே ஒரு வேலையிலிருந்து வேறு ஒரு நல்ல வேலை பெற விரும்புபவர்களோ, காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் உங்கள் இருகைகளையும் சிறிது தேய்த்து கொண்டு, இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைத்து, அதில் செல்வ கடவுளான லட்சுமி தேவி இருப்பதாக பாவித்து, சில நொடிகள் பார்த்த பின்பு வணங்கி படுக்கையிலிருந்து எழ வேண்டும்.

தினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து, குளித்து முடித்து விட்டு ஒரு செம்பு கிண்ணத்தில் சிறிது நீரை ஊற்றி, அதில் சிறிதளவு வெல்லத்தை போட்டு சூரிய ஒளி அந்த கிண்ணத்தின் மீது விழும் வகையில் உங்கள் வீட்டில் துளசி மாடத்திலோ அல்லது வேறு தூய்மையான இடத்திலோ வைக்க வேண்டும். இந்த கிண்ணத்தை வைக்கும் போது சூரியனை “ஓம் ஹ்ரீம் சூர்யாயே நமஹ” என்ற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை சூரியன் உதயமாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாக செய்து முடிக்க வேண்டும்.

crow feeding

சனிக்கிழமைகளில் காகங்களுக்கு வேகவைக்கப்பட்ட அரிசியை உணவாக வழங்கி வருவதால் சனி பகவானின் அருள் கிடைக்க பெற்று விரைவில் நல்ல வேலை அமையும். பணிக்கான எழுத்து தேர்வு, நேர்காணல்களுக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்று விநாயக பெருமானை “ஓம் கம் கண்பத்யே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை துதித்து செல்வது தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை கிடைக்கும் படி அருள்வார் வினைகளை தீர்க்கும் விநாயகர்.

இதையும் படிக்கலாமே:
பித்ரு தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for job in Tamil. It is also called as Velai kidaika pariharam in Tamil.