நீட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பரிகாரம்

Thirumana Pariharam in Tamil
- Advertisement -

தற்காலத்தில் பலருக்கும் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது காலாகாலத்தில் திருமணம் நடைபெறாமல் போவது தான். பொருளாதார நிலை, உடல் நலம் போன்ற பல காரணங்களால் சிலருக்கு திருமணம் நடை பெறாமல் போனாலும், பெரும்பாலானவர்களுக்கு ஜாதகரீதியான காரணத்தின் அடிப்படையில் தான் திருமண தாமதம் ஏற்படுகிறது. அந்த வகையில் திருமண தாமதம் ஏற்பட்டவர்களும், தங்களுக்கு நல்ல முறையில் திருமணம் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்களும் செய்ய வேண்டிய திருமண பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திருமண பரிகாரம்

தங்களுக்கு மனதிற்கினிய திருமண வாழ்க்கை அமையவும், திருமணம் தாமதமாகமல் மிக விரைவில் மனதிற்கு ஏற்ற வாழ்க்கை துணை அமையவும் விரும்புபவர்கள், தினமும் விநாயகப் பெருமான் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மேலும்மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தி தினங்களில் அருகில் இருக்கின்ற விநாயகர் சன்னதிக்கு சென்று விநாயகருக்கு தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, மஞ்சள் நிற லட்டுக்களை நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்த பிறகு, அந்த லட்டுக்களை பக்தர்களுக்கு உண்ண கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் திருமண தடை தோஷங்கள் நீங்கி விரைவிலேயே திருமண யோகம் அமையப் பெறுவார்கள்.

- Advertisement -

வாழை மர வழிபாடு செய்பவர்களுக்கு மிக விரைவிலேயே திருமண வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது. வியாழக்கிழமைகள் தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கின்ற வாழைமரம் ஒன்றிற்கு அடியில் ஒரு செங்கல் வைத்து, அதன் மீது மண் அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றி குரு பகவானுக்குரிய மந்திரங்களை 108 முறை துதித்து வழிபாடு செய்வதால் மிக விரைவிலேயே மணவாழ்க்கை அமையும்.

திருமண வயதை கடந்தும் திருமண வாழ்க்கை அமையாமல் ஏங்குகின்ற ஆண்களும், பெண்களும் தினமும் மாலை வேளைகளில் சூரியன் முழுவதுமாக அஸ்தமிப்பதற்கு முன்பாகவே பூஜையறையில் தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி கற்பூர ஆரத்தி காட்டி உங்களது குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்து வருவதால் விரைவிலேயே திருமண யோகம் ஏற்படும்.

- Advertisement -

ஒரு பௌர்ணமி நாள் இரவு 7 லிருந்து 8 மணிக்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற கோயில்களில் ஆலமரம் இருக்கும்பட்சத்தில், அந்த ஆலமரத்தை108 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் விரைவில் திருமணம் நடைபெற விரும்புவர்களுக்கு, அவர்கள் விரும்பிய படியே மண வாழ்க்கை கிடைக்கும். திருமணம் கால தாமதம் ஆகும் நபர்களுக்கும் கூடிய விரைவிலேயே மண வாழ்க்கை கிடைக்கும்.

திங்கட்கிழமைகள் தோறும் பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு மற்றும் காய்ச்சாத பசும்பால் ஆகியவற்றை கோயில்களுக்கோ அல்லது வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கோ தானம் கொடுத்து வருவதும் ஜாதகத்தில் காலதாமத திருமண தோஷம் இருப்பின் அது நீங்கி, மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைய பெற்று இன்பமாக வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: குரு பரிகாரம்

திருமணம் அமையாமல் தவிக்கின்ற ஆண்களும் பெண்களும் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று, துர்க்கை சப்தசதி எனும் மந்திர தோத்திர நூலில் இருக்கின்ற அர்களாஸ்தரம் எனும் மந்திர துதிகளை துதித்து வருவதால் கூடிய சீக்கிரத்திலேயே அவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

- Advertisement -