இன்று நீங்கள் இவரை வழிபட்டால் உங்கள் தலை எழுத்தே மாறும் தெரியுமா ?

kaala-bairavar4

கால பைரவரை பற்றி அறிந்தவர்கள் அவரின் சக்தியை பற்றி நன்கு உணர்ந்திருப்பார்கள். படைக்கும் கடவுளான பிரம்ம தேவனின் கர்வத்தை அழிக்க அவரின் ஒரு தலையையே கொய்த பெருமை இவருக்கு உண்டு. சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவமாக விளங்கும் கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது கால பைரவாஷ்டமி.

kaala bairavar

பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் கால பைரவாஷ்டமி இந்த வருடம் ஐப்பசி மாதம் 25-ம் தேதி வருகிறது. ஆம் இன்று(11.11.17) தான் கால பைரவாஷ்டமி. இந்த நன்னாளில் அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அந்த பூஜையில் கலந்துகொள்வதன் மூலம் பல அறிய பலன்களை நாம் பெற முடியும்.

காலத்தின் கடவுளாக விளங்கும் கால பைரவர் ஒருவரின் தலைவிதியையே மாற்ற வல்லவர். அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்கள் இவருள் அடக்கம் என்பதால் இவரின் சக்தி அளப்பரியது. இந்த நன்னாளில் காலபைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சார்த்தி நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றி விபூதியால் அபிஷகம் செய்து வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் விலகி செல்லும்.

kaala bairavar

கால பைரவர் காயத்திரி மந்திரம்:

- Advertisement -

“ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:”

kaala bairavar

இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு பெற, திருமண தடை நீங்க, வேலை கிடைக்க ஒரே மந்திரம்

மேலே உள்ள கால பைரவர் காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜபித்து கால பைரவரை வணங்குவது மேலும் சிறப்பு தரும். உங்கள் வீட்டருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று காலபைரவரை இன்று வணங்கி வாழ்வில் நலம் பெறுங்கள்.