கடலைக் கறி கபாப் செய்முறை

kadalai kari kabab
- Advertisement -

இன்றைய காலத்தில் ஹோட்டலில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டு அதன் சுவைக்கு அடிமையாகி கிடக்கும். இளைஞர்களும் குழந்தைகளும் தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள் ஹோட்டல் ஸ்டைலில் அதே சமயம் வீட்டில் ஆரோக்கியமான சில பொருட்களை செய்து கொடுத்தாலே போதும்.

அந்த வகையில் சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து கபாப் செய்யும் முறையைப் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கொண்டை கடலை – 1 கப்
  • கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை – ஓர் இனுக்கு

செய்முறை

கருப்பாக இருந்தாலும் சரி வெள்ளையாக இருந்தாலும் சரி எந்த கொண்டைக்கடலையை வேண்டுமானாலும் இந்த கபாப் செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வெள்ளை கொண்டை கடலை விட கருப்பு கொண்டை கடலைக்கு சத்துக்கள் அதிகம் என்று கூறப்படுவதால் கருப்பு கொண்டை கடமையை தேர்வு செய்து கொள்வோம்.

முதல் நாள் இரவே கருப்பு கொண்டே கடலையை தண்ணீர் ஊற்றி கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குக்கரில் கொண்டைக்கடலையை வைத்து நன்றாக வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். வடித்து எடுத்த கொண்டை கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். நைசாக அரைக்க கூடாது.

- Advertisement -

அரைத்த இந்த கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் என்று அனைத்தையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீரை ஊற்றி பிணைந்து கொள்ள வேண்டும்.

மாவு தயாரான பிறகு அதை அழகாக வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் நன்றாக காய்ந்ததும் அதில் எண்ணெயில் ஊற்றி நாம் தட்டி வைத்திருக்கும் கடலைப்பருப்பு கபாப்பை அதில் வைக்க வேண்டும். ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு அதை திருப்பிப்போட்டு மறுபுறமும் சிவக்க வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கொண்டைக்கடலை கபாப் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: வெங்காய மசாலா கிரேவி செய்முறை

கடைகளில் எப்படி தயார் செய்வார்கள் என்பதை தெரியாத சூழ்நிலையில் அதை சாப்பிடும் நபர்களுக்கு இந்த முறையில் ஆரோக்கியமாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் கடை பக்கம் திரும்பவே மாட்டார்கள்.

- Advertisement -