அட்டகாசமான சுவையில் ஐந்தே நிமிடத்தில் பீட்ரூட் துவையல் எப்படி செய்வது? காரசாரமும், இனிப்பும் கலந்த வித்தியாசமான துவையல் ரெசிபி இதோ உங்களுக்காக!

- Advertisement -

பீட்ரூட் சேர்த்து செய்யப்படும் இந்த துவையல் சற்று இனிப்பு சுவையுடன் காரசாரமாக இருக்கும். புளிப்பு, இனிப்பு என்று எல்லா வகையான சுவையையும் தரக்கூடிய இந்த பீட்ரூட் துவையல் ஆரோக்கியமானதும் கூட! அடிக்கடி இதை செய்து சாப்பிட்டால் ரத்த விருத்தி ஏற்படும், ரத்த சோகை நீங்கும். சுவையான பீட்ரூட் துவையல் ரெசிபி எப்படி செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பீட்ரூட் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ரெண்டு டீஸ்பூன், கடலை பருப்பு – ரெண்டு டீஸ்பூன், வர மிளகாய் – 4, பூண்டு பல் – மூன்று, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, சிறிய பீட்ரூட் – ஒன்று, தேங்காய் கால் – மூடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பீட்ரூட் துவையல் செய்முறை விளக்கம்:
பீட்ரூட் துவையல் செய்வதற்கு முதலில் ஒரு சிறிய அளவிலான பீட்ரூட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து அதன் மேல் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் துருவியும் வைத்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் கடலை பருப்பையும் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் நன்கு சிவக்க வறுபட்டு வரும் பொழுது உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். மிளகாயுடன் தோலை நீக்கிவிட்டு மூன்று பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை லேசாக வதங்கியதும் ஒரு கொத்து கருவேப்பிலை, சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இதை தனியாக ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் எண்ணெயில் அதே பேனில் நீங்கள் துருவி வைத்துள்ள அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பீட்ரூட்டின் பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத மொறுமொறு உளுந்து வடை மிக்ஸிலேயே அரைத்து புஸ்ஸுன்னு வருவதற்கு சூப்பரான 4 டிப்ஸ்! இப்படி சுட்டா முதல் தடவை சுட்டாலும் யாரும் நம்ப மாட்டாங்க!

இப்போது மிக்ஸி ஜாரில் இருக்கும் பொருட்களுடன் நீங்கள் கால் மூடி அளவிற்கு தேங்காயை துருவி அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வதக்கிய பீட்ரூட்டையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ரொம்பவும் நைசாக அரைக்காமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான துவையலாக இருந்தாலும் கொரகொரவென்று இருந்தால் தான் சுவையாக இருக்கும். ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள செம டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த பீட்ரூட் துவையல் ரெசிபி இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -