நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அப்படினா தப்பித் தவறியும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்! திரும்ப வரவே வராது.

astro-cash

ஒரு சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் கொடுப்பது என்பது கூடவே கூடாத ஒரு செயலாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறியும் கடன் கொடுத்து விட்டால், அவர்களுக்கு அந்த பணம் திரும்ப வரவே வராது என்று கூறப்படுகிறது. அதையும் மீறி அவசரத்திற்கு நீங்கள் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து உதவ விரும்பினால் என்ன செய்யலாம்? எந்த நட்சத்திரகாரர்கள் எல்லாம் பணத்தை கடனாக கொடுக்கக்கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

கடன் கொடுப்பது என்பதே இப்போதெல்லாம் மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு விஷயமாக மாறிவிட்டது. நாமே கஷ்டப்படும் நிலையில் அடுத்தவர்கள் வந்து கடன் கேட்கும் பொழுது சட்டென இல்லை என்று கூறி விடவும் முடியாது. அதற்காக இருக்கும் பணத்தை கொடுத்து விடவும் முடியாது தவிப்போம். நன்றாக பழகி விட்ட காரணத்தினால் ஒரு சிலர் எல்லாம் கேட்டவுடன் பணத்தை வாரி வழங்கி கொடுத்து விடுவார்கள். அதற்கு பிறகு அவர்களிடம் பணமே இருக்காது. வீட்டில் எல்லோரிடமும் திட்டு வாங்கி கொண்டு இருப்பார்கள்.

சரி, நல்ல விஷயம் தான். பணத்தை கேட்டவுடன் கொடுத்து விட்டீர்கள். அது மீண்டும் உங்களுக்கு திரும்பி வந்ததா? என்று கேட்டால் இங்குள்ள பாதிப்பேர் இல்லை என்று தான் கூறுவீர்கள். கொடுத்த பணத்தை திரும்ப பெறுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக போய்விட்டது. நம்முடைய அவசரத்திற்கு கொடுத்தார்களே! அவர்கள் கேட்பதற்குள் நாமே திருப்பி தந்து விட வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட ஒரு சிலருக்கு இருப்பதே இல்லை. அதனால் தான் பெரும்பாலும், பணம் கையில் இருந்தாலும் கூட மற்றவர்களுக்கு கடன் கொடுக்க யோசிக்கின்றனர்.

Astrology

ஒரே குடும்பத்தில் இருக்கும் பல நபர்களுக்கு தனித்தனியாக சுய ஜாதகத்தில், ஜென்ம நட்சத்திரம் இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாருக்காவது பணத்தை கடனாக கொடுக்க வேண்டும் என்கிற சூழ்நிலை வந்தால், உங்களுடைய கைகளால் அந்த பணத்தை கொடுக்கக் கூடாது என்பது நியதி. அப்படி மீறிக் கொடுத்தால் அந்த பணம் உங்களுக்கு திரும்ப வரவே வராது. அப்படியான நட்சத்திரங்கள் என்னென்ன?

- Advertisement -

கடன் கொடுக்க கூடாத 12 நட்சத்திரக்காரர்கள்:
1. திருவாதிரை
2. பரணி
3. கார்த்திகை
4. விசாகம்
5. சித்திரை
6. சுவாதி

stars

7. மகம்
8. ஆயில்யம்
9. கேட்டை
10. பூரம்
11. பூராடம்
12. பூரட்டாதி.

cash

27 நட்சத்திரங்களில் இந்த 12 நட்சத்திரக்காரர்கள் மட்டும் உங்களுடைய கைகளால் பணம் வேண்டும் என்று வருபவர்களிடம் கடனாக பணத்தை கொடுக்காதீர்கள். சரி, அவசர தேவைக்கு கேட்கிறார்கள் என்ன தான் செய்வது? உங்கள் குடும்பத்தில் இருக்கும் இந்த நட்சத்திரத்தில் இல்லாத நபர்களிடம் பணத்தைக் கொடுத்து அவர்களிடம் கொடுக்க வையுங்கள். அது தான் உங்களுக்கு மிகவும் நல்லது. மற்ற நட்சத்திரக்காரர்கள் கையால் பணத்தை கொடுக்கும் பொழுது, அது எப்படியாவது திரும்ப வந்து விடும். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள இந்த 12 நட்சத்திரக்காரர்கள் கைகளால் பணத்தை கடனாக கொடுத்தால் திரும்ப வருவது என்பது கேள்விக்குறி தான் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது.

olai-chuvadi

அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது எப்பொழுதும் பெரும் புண்ணியம் தான். ஆனால் திடீரென ஒருவர் வந்து உங்களிடம் குறிப்பிட்ட தொகையை கடனாக பணம் கேட்டு, ரெண்டு நாளில் திருப்பி தந்து விடுகிறேன் அல்லது இரண்டு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன் என்று கேட்கும் பொழுது, நீங்கள் உங்கள் கையால் கொடுத்தால் நிச்சயமாக அந்த பணம் திரும்ப வராது. நீங்கள் பணத்தை தவிர மற்ற எது வேண்டுமானாலும் அடுத்தவர்களுக்கு தாராளமாக கொடுத்து உதவி செய்யலாம். உங்களுடைய கைகளால் அன்னதானம், வஸ்திர தானம், தானியங்கள் தானம் கொடுப்பது மிகச்சிறந்த பலன்களை உங்களுக்கு கொடுக்கும். ஆனால் பணத்தை மட்டும் கடன் கொடுக்காதீர்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.