வாங்கவே கூடாது என்று நினைத்தாலும் சூழ்நிலை கடன் வாங்க வைக்கிறதா? காரணமே இல்லாமல் கடன் சேர்ந்தால், நீங்கள் வீட்டில் செய்யும் இந்த சில தவறும் அதற்கு காரணமாக இருக்கலாம் தெரியுமா?

clothes-sani-bagavan
- Advertisement -

நம் தேவைக்கு ஏற்ப சம்பாதிக்கிறோமா? இல்லையா? என்பதை விட நம் கைகளில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப செலவுகள் வருகிறதா? இல்லையா? என்பதை தான் அதிகம் கவனிக்க வேண்டும். தகுதிக்கு மீறிய எந்த ஒரு விஷயமும் நமக்கு துன்பத்தைக் கொடுக்கும். அந்த வகையில் வரக்கூடிய அனாவசிய செலவுகளும், நமக்கு கவலைகளையும், பிரச்சனைகளையும் கொடுக்கும். இப்படி காரணமே இல்லாமல் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது, கடன் வாங்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தாலும் சூழ்நிலை உங்களை கடன் வாங்க வைக்கிறது என்றால் நீங்கள் செய்யும் இந்த சிறு சிறு தவறுகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அவற்றைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தான் இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kadan

கடன் வாங்கக்கூடாது என்று நினைத்தாலும் கடன் வாங்கும் சூழ்நிலை தான் மிகவும் மோசமான சூழ்நிலை ஆகும். இனியாவது கடன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் எனும் பொழுது மீண்டும் கடன் வாங்க வேண்டிய ஏதாவது ஒரு சூழல் உங்களுக்கு உருவாகும் பொழுது மனநிலையானது தடுமாற்றம் பெறுகிறது. நேர்மறையாக சிந்திக்கும் நபர் கூட இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் பொழுது இயல்பாக எதிர்மறையாக சிந்திக்கத் துவங்குகிறான்.

- Advertisement -

சுலபமான வேலை செய்பவன் கூட லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான், கஷ்டப்பட்டு உழைக்கும் என்னால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை! வரவுக்கு மீறிய செலவுகளால் கடனும் வாங்க வேண்டி இருக்கிறது என்று மனதில் அங்கலாய்ப்பு இருந்தால் நீங்கள் இந்த தவறுகளை எல்லாம் வீட்டில் செய்கிறார்களா? என்பதை முதலில் கவனியுங்கள்!

clothes-on-bed

முதலாவதாக வீட்டில் எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்கக் கூடாது. அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் உடனடியாக செய்து முடித்து விட வேண்டும். உதாரணத்திற்கு சமையலறையில் சிங்க் முழுவதும் சாமானை போட்டு விட்டு பிறகு கழுவிக் கொள்ளலாம் என்று அப்படியே காய விடுவது, கடன் பிரச்சினையை உண்டாக்கும். இந்த வகையில் துவைத்து காய வைத்த துணிகளை மடித்து வைக்காமல் பிறகும் மடித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும், அந்த துணிமணிகளை சோபாவில் போட்டு வைப்பது, பெட் மேல் போட்டு வைப்பது, நாற்காலியின் மீது போட்டு வைப்பது என்று நீங்கள் சோம்பலாக இவற்றை செய்தால் நிச்சயம் அந்த இடத்தில் தரித்திரம் பிடிக்குமாம்.

- Advertisement -

தரித்திரம் பிடித்தால் அந்த வீட்டில் செல்வமானது குறையும். கைகளில் பணமானது தங்காமல் போகும். சம்பாதிக்கும் பணம் போதாமல் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாரிய தலைமுடியை வீட்டிற்குள் போடுவதால் அது ஆங்காங்கே மூலைகளில் போய் சுற்றிக் கொண்டிருக்கும். சீப்பில் இருக்கும் முடியை கூட எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது, நேரா நேரத்துக்கு சூரியன் மறைவதற்குள் வீட்டை கூட்டி பெருக்காமல் குப்பையாக போட்டு வைப்பது, பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் தலைக்கு குளிக்காமல் வேலைகளை செய்வது கூட கடன் சுமையை கூட்டும்.

broom-thudaippam

மேலும் சமையல் கழிவுகளை ஒரு நாள் முழுவதும் அப்படியே கொசுக்கள் மொய்க்குமாறு வைத்திருப்பது, படுக்கும் படுக்கை விரிப்பை அடிக்கடி துவைக்காமல் மாதக்கணக்கில் அசுத்தமாக வைத்திருப்பது, மிதிக்கும் மிதியடிகளை வருடக்கணக்கில் துவைக்காமல் அழுக்காக போட்டிருப்பது போன்றவை கூட தரித்திரத்தை உண்டாக்கும் செயல்கள் தான். இது போன்று இன்னும் நீங்கள் வீட்டில் அலட்சியமாகவும், சோம்பல் தனத்துடன் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட உங்களுடைய கடன் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துவிடும். எனவே எப்பொழுதும் இறை சிந்தனையுடன் உங்களையும், வீட்டையும் சுத்தமாகவும் வைத்திருப்பது அனாவசிய கடன் பிரச்சனையை உண்டு பண்ணாமல் இருக்கும்.

- Advertisement -