கடன் தீர தீப வழிபாடு

kadan deepam
- Advertisement -

கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்பது சொர்க்கலோக வாழ்க்கைக்கு சமமாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த சொர்க்க லோக வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. பலரும் கடன் என்ற பெரிய காட்டிற்குள் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் வெளியே வருவதற்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடனைக்குரிய வட்டியை கட்டி கட்டி அசலை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு அந்த கடனினால் காணாமல் போன பல குடும்பங்கள் இருக்கின்றன. ஒருவரை ஏமாற்றும் எண்ணம் இல்லாமல் வாங்கிய பணத்தை கண்டிப்பான முறையில் திரும்ப கொடுக்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றிகள் கிடைக்கின்றன. மீதம் இருப்பவர்களுக்கு கடனை அடைப்பதற்குரிய வழிமுறைகள் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். கடன் என்னும் இருளில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்த தீபம் வழியை காட்டும் என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். இதற்காக நாம் ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாளத்தின் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பச்சரிசிக்கு மேலாக சுத்தமான மஞ்சள் தூளை தூவ வேண்டும். பிறகு அதற்கு நடுவில் புதிதாக வாங்கிய பெரிய அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகலை சுற்றி மல்லிகை பூக்களால் அலங்கரித்த பிறகு அகலில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி அதற்கு மேல் சிறிது மஞ்சள் தூளை போட்டு தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபமானது வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு பனை ஓலை தேவைப்படும். இந்த பனை ஓலையை முதல் நாளே வாங்கி வந்து நம்முடைய நடுவிரலின் அளவிற்கு எடுத்துக்கொண்டு அதை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அதை எடுத்து சுத்தமாக துணியை வைத்து துடைத்து கொள்ளுங்கள். தீபம் ஏற்றிய பிறகு இந்த பனை ஓலையில் யாரிடமிருந்து கடன் வாங்கினோமோ அவர்களின் பெயரை எழுதிவிட்டு அவர்களுக்கு தரவேண்டிய பணத்தொகையையும் எழுத வேண்டும்.

- Advertisement -

அந்த ஓலையில் எத்தனை பெயர்களை எழுத முடியுமோ அத்தனை பெயர்களை எழுதிக் கொள்ளலாம். பிறகு இந்த ஓலையை எரிகின்ற தீபத்தின் அடியில் இருக்கக்கூடிய தாம்பாளத்திற்கு அடியில் வைக்க வேண்டும். இந்த பனை ஓலையை தாம்பாளத்திற்கு அடியில் வைக்கும் பொழுது கண்டிப்பான முறையில் நெய் தீபம் எரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபமானது குறைந்தது ஆறு மணி நேரமாவது எரிய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக பரிகாரம்

இப்படி தொடர்ந்து ஆறு வாரங்கள் நாம் தீபம் ஏற்றி வழிபட நமக்கு ஏற்பட்டிருக்கின்ற எப்பேற்பட்ட கடனாக இருந்தாலும் அவை அனைத்தும் இந்த தீபத்தின் அருளால் விரைவிலேயே அடைந்து விடும்.

- Advertisement -