கடன் பிரச்சனையை நினைத்து இனி கவலையே கிடையாது. இந்த மூன்று நாட்கள், இவரை போய் பாருங்கள். கஷ்டத்துக்கு மேல் கஷ்டத்தை கொடுக்கும் கடன் தொல்லையும் காணாமல் போகும்.

narasimma
- Advertisement -

சாவியே இல்லாத ஒரு பூட்டை கூட திறக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டோம். நான்கு பக்கமும் கதவு பூட்டி இருக்கு, வழிகளும் அடைந்து விட்டது. அந்த இடத்திலிருந்து வெளியில் வருவது மிக மிக சிரமம் என்றால், உடனே கண்ணை மூடிக்கொண்டு நரசிம்மர் சாமியை வேண்டிக் கொண்டால், சாவி இல்லாத பூட்டுகள் கூட திறக்கும் என்று சொல்லுவார்கள். அவ்வளவு சக்தி இந்த நரசிம்மர் சாமிக்கு.

திக்குத் தெரியாத திசையில் சிக்கிக் கொண்டவர்களை கூட கை பிடித்துக் கொண்டு சரியான இடத்தில் சேர்த்து விடுவாராம். அவ்வளவு பெரிய சக்தி கொண்ட நரசிம்மர் சாமியை கடன் தீர எந்த கிழமையில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

கடன் தீர நரசிம்மரை வழிபட வேண்டிய 3 நாட்கள் என்னென்ன?
கடன் பிரச்சனை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முதலில் நம்முடைய வருமானத்திற்கு தகுந்தபடி செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். செலவுக்கு தகுந்தபடி, வருமானத்தை மீறி, கடன் வாங்க கூடாது. நாளை வரக்கூடிய வருமானத்தை எப்படி எல்லாம் செலவு செய்யலாம் என்று பிளான் செய்து யோசிக்காதீங்க.

வருமானம் வருவதற்கு முன்பே, அந்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று பிளான் செய்தால், நிச்சயமாக கடன் பிரச்சனை வரத்தான் செய்யும். வரக்கூடிய வருமானத்தை எப்படி சேமிப்பது என்பதற்காக இனி பிளான் செஞ்சு பாருங்க. கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள். சரி பதிவுக்குள் வருவோம். கடன் தீர நரசிம்மரை எந்தெந்த நாளில் எப்படி வழிபாடு செய்வது.

- Advertisement -

பிரதோஷ நாளன்று, பிரதோஷ நேரமான மாலை 4:30 லிருந்து 6.00 மணிக்குள் நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்த பூக்களை நரசிம்மருக்கு வாங்கிச் செல்லுங்கள். பக்தியோடு இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சிறிது நேரம் அந்த நரசிம்மருக்கு முன்பாக அமர்ந்து உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உண்மையான பக்தி மனதில் இருக்க வேண்டும். ஐந்து பிரதோஷ நாளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபாடு செய்தால் உங்கள் கடன் பிரச்சனைக்கு உண்டான விமோசனம் சீக்கிரம் கிடைக்கும்.

இதே போல மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் கோவிலுக்கு சென்று உங்களுடைய பெயர் நட்சத்திரம் ராசி சொல்லி அர்ச்சனை செய்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கடன் தீர வேண்டும் என்று வேண்டுதலை வைக்க வேண்டும். மூன்றாவதாக வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமை அன்று நரசிம்மர் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மூன்று நாட்களும் தவறாமல் நரசிம்மர் வழிபாடு செய்து, உங்கள் கடன் பிரச்சனையை நரசிம்மரிடம் சொல்லி அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் எவ்வளவு பெரிய கடன் தொல்லையாக இருந்தாலும் அதை ஒரு முடிவுக்கு கொண்டு வரக்கூடிய வேலையை அந்த நரசிம்மர் தொடங்கி விடுவார். (உங்க வீட்டு பக்கத்தில் நரசிம்மர் சன்னிதானம், நரசிம்மர் கோவில் எதுவுமே இல்லையா. வீட்டில் நரசிம்மரை மனதார நினைத்து, விளக்கு ஏற்றி வைத்து, மேல் சொன்னபடி மூன்று தினங்களில் வழிபாட்டை மேற்கொண்டாலும் நரசிம்மர் உங்கள் கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொடுத்து விடுவார்).

இதையும் படிக்கலாமே: யார் நினைத்தாலும் உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டியை வைக்க முடியாது. வரவேற்பறையில், தண்ணீரில் இந்த 3 பொருட்கள் இருந்தால்.

வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு நீங்கள் சும்மாவே இருக்க கூடாது. கடனை அடைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் வரும் தடைகளை தகர்த்தெறியக்கூடிய வேலையை நரசிம்மர் பார்த்துக் கொள்வார். படிப்படியாக உங்களுடைய கடன் பிரச்சனை குறைந்து மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் கஷ்டங்களில் எல்லாம் இருந்து விடுபட்டு நல்லதொரு வாழ்க்கையை வாழ இந்த மூன்று தினங்களில் நரசிம்மர் வழிபாடு மேற்கொண்டு பாருங்கள். நீங்கள் நம்ப முடியாத நிறைய நல்ல அதிசயங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -