இந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் கஷ்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வீட்டில் லட்சுமி கடாக்ஷம் குறைய முக்கிய காரணம்.

- Advertisement -

பெரும்பாலும் வீட்டில் நாம் பெரிய அளவில் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்யவில்லை என்றாலும், தினமும் விளக்கு ஏற்றுவது வார வாரம் பூஜை செய்வது இப்படியான சில விஷயங்களை நாம் செய்வது வழக்கம். அப்படியெல்லாம் செய்தும் கூட வீட்டில் நிம்மதி இல்லாமல் கஷ்டங்கள் மேலும், மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு நாம் செய்யும் சில தவறுகள் கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன காரணம் அதை எப்படி சரி செய்வது என்பது எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் துன்பம் வருவது இயல்பு தான். அது இல்லாமல் போனாலும் வாழ்க்கை வாழ்வதற்கான அர்த்தம் கிடையாது. எப்போதும் இதே நிலை தொடர்ந்தால் அந்த வாழ்வை வாழ்வதில் நிம்மதியே இருக்காது. ஆனால் இப்படி நம் வாழ்வை நிம்மதி இல்லாமல் ஆக்கிக் கொள்வதற்கு நம்முடைய சில குணங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வீட்டில் செய்ய கூடாதவை:
நாம் வீட்டில் பூஜை செய்யும் நாட்களில் பூஜை முடித்த பிறகு கண்டிப்பாக பிறர் வீட்டுக்கு செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாகவே அடுத்தவர் வீட்டிற்கு சென்று தேவையில்லாத பேச்சுக்களை பேசுவதை தவிர்ப்பது நல்லது. அது இல்லாமல் வீட்டில் பூஜை நாட்களில் அல்லது விசேஷ நாட்கள், வழிபாடு செய்யும் நாட்களில் அடுத்தவர் வீடுகளுக்கு சென்று நாம் அமர்ந்து பேசும் போது நம் பூஜை செய்த பலன் குறைவதோடு, நம் வீட்டின் நல்ல அதிர்வலைகள் எல்லாம் சென்று, அங்கு இருக்கும் தேவை இல்லாத எதிர்மறை ஆற்றல்கள் நம்மை தொடரும் என்று சொல்லப்படுகிறது. இந்த தவறை ஆண், பெண் இருவருமே தவிர்க்க வேண்டிய ஒன்று.

இப்படி அடுத்தவர் இல்லங்களுக்கு சென்று பேசுவது என்பது இறைவழிபாட்டின் சக்தியை குறைப்பதோடு, நாம் பேசும் சில தேவையில்லாத பேச்சுக்களே நமக்கு துன்பத்தைத் தேடி தரும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது நாம் அடுத்தவர் வீட்டிற்கு சென்று அங்கு இருக்கும் ஒரு பொருளை பற்றியோ அல்லது அவர்கள் அணிந்திருக்கும் நகையை பற்றியோ, அவர்கள் வீட்டில் இருக்கும் ஏதோ ஒன்றை பார்த்து உங்க வீட்டில் ஏன் இதை இப்படி வைத்திருக்கிறீர்கள், இந்த நகை நன்றாக இல்லை, இந்த பொருளை இங்கு வைக்க கூடாது. இப்படி இருந்தால் துன்பம் வரும் இது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

நாம் சென்றிருக்கும் வீட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நல்லபடியாக அவர்கள் மனம் நோகாதபடி எடுத்துச் சொல்ல வேண்டும். அத்தகைய குணம் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பற்றி பேச வேண்டும். இல்லை என்றால் குறைகளை எடுத்து சொல்லி அவர்கள் மனதை துன்புறுத்தும் போது நமக்கான நல்ல அதிர்வலைகள் குறைய தொடங்கி விடும். உதாரணமாக நீ அணிந்திருக்கும் புடவை சாதாரணமாக உள்ளது நன்றாக இல்லை என்றால் உங்களிடம் ஆடை சேரும் வாய்ப்பு குறையும். இது போல நீங்கள் எந்த ஒரு பொருளை குறை கூறுகிறதோ அது உங்களிடம் சேரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் கேட்கும் போது இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் சொல்லும் விதத்தில் அடுத்தவர் மனதை நோகடிக்காமல் சொல்ல வேண்டும். அதை செய்யாமல் மற்றவர் துன்பப்படும் செயல்களை செய்தால் அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்ள தான் வேண்டும். முடிந்த அளவு நாம் அடுத்தவர் விசயத்தில் கருத்து செல்லாமல் இருப்பது நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது.

இதையும் படிக்கலாமே: நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டுமா? யாருக்கும் தெரியாமல் இதை மட்டும் செய்து விடுங்கள். அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புதமான பரிகாரம்.

வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் இந்த குணத்தை தவிர்த்தாலே வீட்டில் செய்யும் பூஜைக்கான பலன்கள் முழுவதுமாக உங்களுக்கு கிடைத்து, வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த குறைகள் உங்களிடம் இருந்தால் அதை சரி செய்து கொண்டு நல்ல செல்வ செழிப்பான வாழ்வை வாழுங்கள்.

- Advertisement -