இன்று சனி மகா பிரதோஷம். இன்றைய நாள் சனிபகவானை இப்படி வழிபாடு செய்தால், வாழ்க்கையில் கடன் பிரச்சனையே இருக்காது. எவ்வளவு பெரிய கடனும் சீக்கிரத்திலேயே அடைந்துவிடும்.

sani-and-sivan
- Advertisement -

சாதாரண பிரதோஷ நாளை ஒப்பிடும்போது, இந்த சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபாடு செய்தால், சனிபகவானால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்முடைய நம்பிக்கை. வாழ்க்கையில் கடன் பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருபவர்கள், சனிப்பிரதோஷத்தன்று சனிபகவானை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் கடன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் வாழ தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு ரகசிய பரிகார வழிபாட்டு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sivan

சனிக்கிழமை மாலை, பிரதோஷ வழிபாடு சிவன் கோவில்களில் நடைபெறும். ஆனால் நீங்கள் சனிக்கிழமை காலையில், சனி பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் இது. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று, சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய வேண்டும். பக்கத்தில் இருக்கும் கோவிலில், அங்கு இருக்கும் குருக்களிடம் இதற்கான அனுமதியை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கையாலேயே நவக்கிரகத்தில் இருக்கும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வதற்கு அனுமதி கிடைத்தால், அது பெரிய பாக்கியம் தான். ஒரு பாட்டிலில் சுத்தமான நல்ல நல்லெண்ணெயை கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த நல்லெண்ணையை உங்களுடைய கையாலேயே நவகிரகங்களில் இருக்கும் சனி பகவானின் தலையின் மேல் ஊற்ற வேண்டும். அந்த எண்ணெய் சனிபகவானின் தலையிலிருந்து கால் பாதங்கள் வரை அப்படியே வழிந்து கீழே வரும்.

sivan

அந்த எண்ணெய் எப்படி கீழ்நோக்கி வருகின்றதோ, அதேபோல உங்களுடைய கடனும் கீழ்நோக்கி கரைந்து செல்லும். ஒருவேளை உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கும் கோவிலில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது. உங்களால் முடிந்த 1/2 லிட்டர் நல்லெண்ணெய் ஆக இருந்தாலும் சுத்தமான நல்லெண்ணெய் ஆக வாங்கி அதை கோவில் குருக்களிடம் கொடுத்துவிடுங்கள். அவருடைய கையாலேயே சனீஸ்வர பகவானுக்கு இந்த எண்ணெயைக் கொண்டு அபிஷேகம் செய்ய சொல்லுங்கள். இப்படி செய்தாலும் உங்களுடைய கடன் பிரச்சனைகள் குறையும்.  சனிப் பிரதோஷத்தன்று, சனிபகவானுக்கு, நீங்கள் வாங்கிக் கொடுத்த நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த சனி பிரதோஷம் என்று மட்டும் கிடையாது. எப்போது சனிக்கிழமைகளில் பிரதோஷம் வந்தாலும் நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அபிஷேகம் செய்யச் சொல்லுங்கள். இது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லா வகையான கடனையும் படிப்படியாக குறைப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லப்பட்டிருக்கும் சுலபமான பரிகாரம். காலை இந்த அபிஷேகத்தை சனிபகவானுக்கு செய்து முடித்து விடுங்கள்.

navagragham-1

மாலை பிரதோஷ வேளையில் சிவ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். சிவபெருமானுக்கு வில்வ இலையை வாங்கிக்கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களால் முடிந்த அளவு பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலில் தயிர்சாதமும், எள் சாதமும் தானம் கொடுக்க வேண்டும். இப்படி செய்து வர உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். சனிபகவானால் ஏற்படும் இன்னல்கள் உங்களுக்குப் பெரிய பாதிப்பை கொடுக்காமல், உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் படிப்படியாக குறைய செய்யும். நம்பிக்கையோடு, முழு பக்தியோடு மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து அனைவரும் பலனடைய வேண்டும் என்று எம்பெருமானிடம் மனதார வேண்டுதல் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -