நாளை வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு இப்படி மட்டும் பூஜை செய்தால், உங்களுடைய கடன் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். வீட்டில் கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

- Advertisement -

பொதுவாகவே விநாயகரது வழிபாடு நம்முடைய கஷ்டங்களை எல்லாம் போக்கக் கூடியது தான். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை உண்மையான பக்தியோடு இரு கைகளை கூப்பி வணங்கினாலே போதும். வரங்களை வாரி வழங்கி விடுவார். இருப்பினும் நம்முடைய கோரிக்கைகள் கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் பட்சத்தில் அதற்கு உண்டான முறைகளோடு பூஜை செய்தால் பலனை அதி விரைவாக பெற முடியும். அப்படி ஒரு சங்கடஹர சதுர்த்தி பூஜையை பற்றித் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த பூஜையை செய்தால், அடுத்த சங்கடஹர சதுர்த்தி அன்று உங்களுடைய கஷ்டங்களில் ஒரு பங்கு கஷ்டமாவது நிச்சயம் குறைந்திருக்கும்.

maragatha-vinayagar

நம் எல்லோரது வீட்டிலும் விநாயகரது திருவுருவப் படம் அல்லது சிலை இது இரண்டில் ஏதாவது ஒன்று கட்டாயம் இருக்கும். படமாக இருந்தால் அதை துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். சிலையாக இருந்தால் கட்டாயமாக நாளை விநாயகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜைக்கு சிவப்பு நிற பூ, சிவப்பு நிற நிவேதனம், சிவப்பு நிற விளக்கு ஏற்றும் திரி, ஒரு சிவப்பு நிறத் துணி, ஒரு ரூபாய் நாணயம், கட்டாயம் தேவை. பூஜை அறையில் அலங்காரங்களை முடித்து வைத்து விட்டு, விநாயகருக்கு என்று நாளை ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

color-thiri

விநாயகருக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நிவேதனத்தை வைக்கலாம். அது உலர்திராட்சை, நாட்டு சர்க்கரை, வெல்லம், எதுவாக இருந்தாலும் சரி இரண்டு பேரீச்சம் பழங்கள் இருந்தாலும் அதை விநாயகருக்கு நிவேதனமாக வைத்து விடுங்கள். செம்பருத்திப் பூ, அரளி பூ இதில் எது கிடைத்தாலும் விநாயகருக்கு சூட்டலாம் கனகாம்பரம் கூட வைக்கலாம். ஒரு சிவப்பு நிறத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கஷ்டங்கள் முழுமையாக தீர வேண்டும் என்று ஒரு ரூபாய் நாணயத்தை அந்த சிவப்பு நிற துணியில் வைத்து முடிந்து விநாயகரது பாதங்களில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக விநாயகரின் படத்திற்கு முன்பாக சிறிய ஒரு தட்டை வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் சிவப்பு நிற குங்குமத்தை எடுத்து விநாயகருக்கு 27 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். 27 முறை அர்ச்சனை செய்யும் போதும் ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்தால் போதும்.

pillaiyar-manai

இந்தப் பூஜையை நிறைவு செய்துவிட்டு, இறுதியாக தீப தூப கற்பூர ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். விநாயகரது பாதங்களில் வைத்த ஒரு ரூபாய் முடிச்சை விநாயகர் கோயிலுக்கு நீங்கள் எப்போது செல்கிறீர்களோ அப்போது கொண்டு போய் அந்த உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

manjal-pillaiyar

இந்த சங்கட சதுர்த்தி அன்று மட்டுமல்ல, வரக்கூடிய எல்லா சதுர்த்தி நாள் அன்றும் மேல் சொன்ன முறைப்படி உங்களுடைய கோரிக்கைகளை விநாயகரிடம் வைத்து கொண்டே வாருங்கள். உங்களுடைய கடன் கஷ்டம், பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும், அந்தக் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும். பணப் பிரச்சினைக்கு மட்டும்தான் இந்த வேண்டுதல் என்று கிடையாது. உங்களுக்கு ஏதாவது குறிக்கோள் இருக்கின்றது அதை நிறைவேற வேண்டும் எனும் பட்சத்திலும் நீங்கள் விநாயகருக்கு இப்படி பூஜையை செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -