கடன் பிரச்சினை தீரவும் செல்வ செழிப்பு உயரவும் லஷ்மி நரசிம்மர் வழிபாடு

lakshmi narasimmar valipadu
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஏதாவது ஒரு வகையில் செல்வ செழிப்பு குறைந்துவிட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். என்னதான் கடுமையாக உழைத்தாலும் கடவுளின் அருள் பரிபூரணமாக இருந்தால்தான் அவர்களால் செல்வ செழிப்பில் உயரமுடியும்.

அவ்வாறு இல்லாவிட்டால் என்னதான் சம்பாதித்தாலும் அது கையில் தங்காமல் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகி கொண்டே இருக்கும். மேலும் கடன் பிரச்சினைகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செல்வ செழிப்பு உயரவும். கடன் பிரச்சினை தீரவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான லஷ்மி நரசிம்மர் வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் என்று பார்க்கும் பொழுது நம் அனைவருக்கும் தெரிந்தது மகாலட்சுமி தாயார் தான். இதே போல் கடன் பிரச்சினையிலிருந்து தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் வழிபடக்கூடிய தெய்வமாக கருதப்படுபவர் நரசிம்மர். இந்த நரசிம்மரையும் லக்ஷ்மி தேவியும் ஒரு சேர லட்சுமி நரசிம்மராக நாம் வழிபடும் பொழுது நம்முடைய கடன் பிரச்சினைகளும் தீரும் செல்வ செழிப்பும் உயரும் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டை வீட்டிலேயே நாம் மேற்கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை இந்த வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. மேலும் இந்த வழிபாட்டை நாம் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். முதல் வாரம் செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் மற்ற வாரங்களும் செவ்வாய்க்கிழமையில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு லஷ்மி நரசிம்மர் படம் கண்டிப்பான முறையில் தேவைப்படும். செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு எப்போதும் பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை எல்லாம் முடித்துவிட்டு, லட்சுமி நரசிம்மர் படத்தை எடுத்து சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு முன்பாக ஒரு தலை வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும். உங்களின் விருப்பப்படி எவ்வளவு பச்சரிசியை வேண்டுமானாலும் வைக்கலாம்.

பிறகு ஒரு நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை எடுத்து நன்றாக சுத்தம் செய்து அதை சரிசமமாக இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். அந்த தேங்காய்க்கு நான்கு பக்கமும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். இந்த தேங்காயை பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியின் மேல் வைத்து சுத்தமான நெய்யை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து கடன் பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் ருண விமோசன நரசிம்மர் கவசத்தை படிக்க வேண்டும்.

- Advertisement -

கடன் பிரச்சினை இல்லை ஆனால் செல்வ செழிப்பு உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் லட்சுமி அஷ்டோத்திரத்தை படிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து படிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு படித்து முடித்துவிட்டு இந்த தீபமானது அதுவாக முழுவதும் எரிந்து முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். தீபம் முழுவதும் எரிந்து முடித்த பிறகு அந்த பச்சரிசியையும் தேங்காயையும் யாருக்காவது தானமாக தந்து விட வேண்டும் அல்லது பசு மாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். ஏழாவது வாரம் மட்டும் அரிசியை தானமாக தராமல் நாமே வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை மட்டும் தானம் தந்து விட வேண்டும். ஏழாவது வாரம் சர்க்கரை பொங்கலையும் நெய்வேத்தியமாக வைத்து படைக்க வேண்டும். ஏழாவது வாரம் வைத்திருக்கும் பச்சரிசியை நம்முடைய வீட்டு உபயோகத்திற்கு நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது அந்த அரிசியை பிரசாதமாக செய்து கடவுளுக்கு நெய்வேத்தியமாகவும் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்

இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் லட்சுமி நரசிம்மரை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு கண்டிப்பான முறையில் உயரும். இதனால் கடன் பிரச்சனைகளும் முற்றிலும் நீங்கும்.

- Advertisement -