- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் கடனை திருப்பி அடைக்க செப்டம்பர் மாத வியாழக்கிழமை மைத்ரேய முகுர்த்தில்...

உங்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் கடனை திருப்பி அடைக்க செப்டம்பர் மாத வியாழக்கிழமை மைத்ரேய முகுர்த்தில் செய்ய வேண்டிய சிறப்புப் பரிகாரம்

- Advertisement -

ஒருவர் தங்களின் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகவும், சிக்கலாகவும் இருப்பது ஒருவருக்கு இருக்கும் நெருக்கடியான கடன் பிரச்சனை தான். ஒரு சிலரிடம் வாங்கிய கடனை எத்தனை வருடம் ஆனாலும் திருப்பிக் கொடுக்க முடியாத சூழநிலை இருந்து கொண்டிருக்கும். இதனால் மிகுந்த மன உளைச்சலும், அவ நம்பிக்கையுமே அதிகமாக உண்டாகும். மாதத்திற்கு ஒருமுறை வரும் மைத்ரேய முகூர்த்தத்தில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் மிகுந்த தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

bayam-fear

ஏழை முதல் பணக்காரர்கள் வரை அவர்களுக்கு ஏற்ற வகையில் கடன் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏழையாக இருந்தால் சிறிய தொகை கடனாகவும், பணக்காரர்களாக இருந்தால் கோடிக்கணக்கில் கடன் வைத்திருப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். இவ்வாறு இன்றைய காலத்தில் கடன் வாங்காமல் எந்த ஒரு மனிதனும் வாழ முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எவரும் விருப்பத்துடன் கடன் வாங்குவதில்லை. தங்களின் வருமானம் மாத செலவிற்கு போதுமானதாக இல்லாத சூழ்நிலையிலும், தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகளுக்காகவும் அல்லது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென ஏதேனும் தொழில் துவங்குவதற்காகவுமே கடன் வாங்குகின்றனர்.

- Advertisement -

இவ்வாறு நெருக்கடியான சூழ்நிலையில் நாம் வாங்கும் கடனை உடனே திருப்பிக் கொடுத்து விட்டால் நமக்கு அது நன்மையாக இருக்கும். ஆனால் அவ்வாறு திருப்பிக் கொடுக்க முடியாமல் பல வருடங்கள் அதனை அப்படியே வைத்து இருந்தோம் என்றால் நமக்கு தேவை இல்லாத பிரச்சினைகளும், மன உளைச்சலும் தான் ஏற்படும். இதனால் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறான பிரச்சனை கொடுக்கும் கடன்களை இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் நாம் செய்யும் பரிகாரத்தின் மூலம் விரைவில் அடைத்துவிட முடியும்.

cash

இதற்காக 23 – 9 – 2021 அன்று வியாழக்கிழமை காலை 8.05 முதல் 8. 54 வரை இருக்கும் செப்டம்பர் மாத மைத்ரேய முகூர்த்த நேரத்தில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரை எடுத்துக்கொண்டு, அதில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அவர்களின் பெயரை அதன் மீது எழுதி விட்டு, நீங்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையில் இருந்து ஒரு சதவீத தொகையை அதாவது நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தால் ஒரு பத்து ரூபாயை அந்த கவரில் வைத்து அதனுடன் ஒரு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

pachai karpooram

பின்னர் இந்தக் கவரை பூஜை அறையில் கடவுளின் பாதத்தில் வைத்து இப்பொழுது நான் எடுத்து வைத்திருக்கும் இந்த தொகை பல மடங்காக பெருகி என்னிடம் திரும்பி வரவேண்டும், நான் வாங்கிய கடனை எளிதில் அடைத்து விட வேண்டும். என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

poojai1

இந்த பரிகாரத்தை ஒருமுறை இரண்டு முறை செய்துவிட்டு பலன் ஏதும் கிடைக்கவில்லை என்று மனதை தளர விடக்கூடாது. இந்த மைத்ரேய முகூர்த்த பரிகாரத்தை தொடர்ந்து சில மாதங்கள் செய்து வர நமது கர்ம வினைகளின் காரணமாக சரியான நேரம் வரும்பொழுது நமக்கு பிரச்சனை கொடுக்கும் கடன் தொல்லைகள் விரைவில் அடைந்துவிடும். இந்தப் பரிகாரம் செய்து வர கடன்கள் அடைந்த பின்னர் நீங்கள் கவரில் எடுத்து வைத்த தொகையை பயன்படுத்தி பிறருக்கு உணவை தானமாக வழங்கினால் நமக்கும் நமது குடும்பத்திற்கும் மிகுந்த புண்ணியம் வந்தடையும்.

சற்று முன்