குழந்தை பாக்கியம் பெற கார்த்திகை தீப வழிபாடு

murugan vilakku
- Advertisement -

இந்த கார்த்திகை மாதமும் கார்த்திகை தீபமும் பல விசேஷமான பலன்களை தரக் கூடியதாக அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய தீபத் திருநாளில் நம் வீட்டில் ஏற்றப்படும் தீபம் லட்சுமி கடாட்சத்தை கொடுத்து முருக பெருமான், சிவபெருமான் போன்றோரின் அருளை வாரி வழங்குவதாக உள்ளது. அன்றைய திருநாளில் நாம் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் விசேஷமானது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் இந்த தீப பரிகார முறையை செய்யும் போது நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இன்றைய தினம் காலை முதல் கார்த்திகை தீபத்திற்கான அனைத்து வேலைகளையும் எப்போதும் போல் செய்து விடுங்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ள இருக்கும் தம்பதியினர் அருகில் இருக்கும் முருகர் ஆலயம் அல்லது சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

அதே போல் மாலையில் தீபத்திருநாளின் வழிபாட்டையும் நிறைவாக செய்து விடுங்கள். வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி தெய்வத்தை வணங்கி உணவு படைத்து வணங்குவது என உங்களின் முறை எப்படியோ அதன்படியே அனைத்து வழிபாடுகளையும் செய்து விடுங்கள். அன்றைய தினத்தில் அசைவம் சேர்க்கக் கூடாது என்பது மட்டும் தான் முக்கியம்.

- Advertisement -

இரவு உறங்க செல்வதற்கு முன்பாக உங்கள் படுக்கை அறையை சுத்தம் செய்து விடுங்கள். அதில் நல்ல தெய்வீக மணம் கமழும் நறுமணம் மிக்க ஊதுபத்தி ஏற்றி வைத்து விடுங்கள். நறுமணத்திற்காக ஜவ்வாது அத்தர் போன்றவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து ஒரு குத்துவிளக்கை எடுத்து அதில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து குத்து விளக்குக்கு பூ வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டுக் கொள்ளுங்கள். இதற்கு வேறு திரி பயன்படுத்த வேண்டாம்.

அதன் பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதன் மேல் இந்த குத்து விளக்கை வைத்து விடுங்கள். இந்த குத்து விளக்கு படுக்கை அறையில் மெத்தையின் உயரத்தை விட சற்று உயரமான இடத்தில் வைக்க வேண்டும். தரையில் படுப்பவர்களாக இருந்தால் இதை ஒரு மனையின் மேல் வைத்து விடுங்கள். அதாவது நீங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு கொஞ்சம் மேலே இந்த குத்து விளக்கு இருக்க வேண்டும். இதை தரையில் வைக்கக் கூடாது.

- Advertisement -

அதன் பிறகு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். தீபம் எந்த காரணம் கொண்டும் அணைய கூடாது. அத கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தீபத்தின் ஒளியானது அந்த அறை முழுவதும் நிறைந்திருக்க வேண்டும். வேறு எந்த விளக்கின் வெளிச்சமும் அங்கு இருக்கக் கூடாது. இந்த ஒளியில் தம்பதியினர் மனமொத்து ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

அதே போல் இந்த தீபத்தின்ஒளி தானாக குளிர்ந்து விட வேண்டும். ஆகையால் தான் அதற்கு பஞ்சி திரி போட வேண்டும். இதற்கு மற்ற திரிகளை பயன்படுத்தும் போது எண்ணெய் தீர்ந்ததும் திரி எரிந்து விடும். அவ்வாறு ஆகக் கூடாது. இப்படி தீபதிருநாளான மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதில் தம்பதியினரில் மனநிலை மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ வழிபாட்டு முறை.

இந்த பரிகாரமானது நம் முன்னோர்கள் காலம் முதலில் பின்பற்றி வந்த ஒரு வழிபாடு முறை தான். இறைவனை நினைத்து தம்பதியினர் மனமொத்து இதை செய்யும் பொழுது நிச்சயம் பாக்கியம் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதை மேற்கொள்ளலாம்.

- Advertisement -