கல் உப்பு ஜாடியை இப்படி வைத்தால் பணக்கஷ்டம் வரும்.

jadi
- Advertisement -

துன்பம் என்ற இருள் நம்மை சூழாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை பின்பற்றி தான் ஆக வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கவனத்தோடு பின் சொல்லக்கூடிய விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதும். உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது. கடன் சுமை அதிகமாகாது. வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும்.

பெண்களுடைய அஜாக்கிரதையும் கவனக் குறைவும் தான் வீட்டில் கஷ்டம் வருவதற்கு காரணமாக இருக்கும். பெண்களே நீங்கள் எந்த விஷயத்தில் எல்லாம் உஷாராக இருக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கடன் கஷ்டத்திலிருந்து விடுபட

முதலில் வீட்டுப் பெண்கள் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது. நம்முடைய குடும்ப விஷயங்கள் நமக்கு மட்டும்தான் தெரிய வேண்டுமே தவிர, அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் நண்பர்கள் என்று எல்லோரிடமும் ரொம்ப ரொம்ப வெளிப்படையாய் இருப்பதாக நினைத்துக் கொண்டு, எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லாதீங்க. இது முதல் விஷயம். நீங்கள் மூடி வைக்க வேண்டிய முதல் விஷயம் உங்கள் வீட்டு, குடும்ப வரவு செலவு கணக்கு, உங்கள் குடும்ப வருமானம்.

அடுத்ததாக நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய இடம் பணம் வைக்கும் அலமாரி, பீரோ, பெட்டி எதுவாக இருக்கட்டும். அதை திறந்தபடி வைக்காதீங்க. பணத்தை எப்போதும் ஒரு மூடிய இடத்தில் தான் வைக்க வேண்டும். பர்ஸில் வைத்தால் கூட ஜிப்பு போட்டு மூடி தான் வைக்கணும். பீரோவில் சாவி எப்போதும் தொங்கிக்கொண்டு இருக்கக் கூடாது. பீரோவை பூட்டி சாவியை பத்திரப்படுத்தி வையுங்கள். அப்போது பணமும் உங்கள் வீட்டில் பத்திரமாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து சமையல் அறைக்கு வருவோம். சமையலறையில் இருக்கும் கல் உப்பு ஜாடி. சில பெண்கள் சமைக்கும் போது அந்த கல்லுப்பு ஜாடியை திறந்த படியே வைப்பார்கள். சமையலை முழுமையாக முடித்து வைத்து மூடிக்கொள்ளலாம் என்று. ஆனால் அது முற்றிலும் தவறு‌. சமையல் அறையில் இருக்கும் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படும் உப்பு ஜாடி, எப்போதும் மூடி தான் இருக்க வேண்டும்.

தேவைப்படும்போது ஜாடியை திறந்து உப்பை பயன்படுத்திவிட்டு, உடனடியாக மூடி விடுங்கள். கல் உப்பு ஜாடி திறந்தபடி இருந்தால் உங்கள் வீட்டில் கடன் சுமை வரும். ஜாடியை திறந்து வைத்தால் கல்லுப்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி உங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வார்கள் என்பது தான் இதற்கு அர்த்தம்.

- Advertisement -

அடுத்து பால், தயிர், நெய் இவைகளை கையாளும்போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பால் தயிரை வீட்டில் அடிக்கடி வீணாக்கக்கூடாது. கெட்டுப் போய் குப்பையில் ஊற்றக்கூடாது. ரொம்பவும் புளித்துப் போய்விட்டது என்று தயிரை அடிக்கடி குப்பையில் கொட்டாதிங்க. அளவோடு வாங்கி அளவோடு தயிர் உரை ஊற்றி பயன்படுத்துங்கள்.

தயிர், பால், அன்னம் அதாவது சாதம் குழம்பு இவைகளை எல்லாம் சமைத்து முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு மிச்சம் மீதி இருப்பதை அப்படியே கொண்டு போய் சமையல் மேடையில் வைத்து திறந்தபடி விடவே கூடாது. எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பு மரியாதை கொடுத்து மூடி பராமரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் நிலை வாசலில் போடவேண்டிய கோலம்

மேலே சொன்ன விஷயங்களில் பெண்களுக்கு பொறுப்பு வந்து விட்டாலே உங்கள் வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைந்துவிடும். பணக்கஷ்டம் வராது என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -