வாரத்தில் இந்த ஒருநாளில் மட்டும் கடன் வாங்கிடாதிங்க. அப்படி வாங்கினால் அது சங்கிலி போல தொடர்ந்துகொண்டே போகும்.

kadan1
- Advertisement -

எந்த ஒரு விடயத்தையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வாழ்ந்த நம் முன்னோர்கள், அந்த விடயங்களையெல்லாம் விதிகள், சாஸ்திரங்களாக நமக்கு விட்டுச்சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் வாழ்வில் சுகபோகங்கள் அனைத்தையும் பெற்று வாழ நம் முன்னோர்கள் அறிவுறுத்திய சில ஆன்மீக விதிகள் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நம்மை வாழ்நாள் முழுவதும் வாட்டி வதைக்கின்றன தரித்திர நிலை மாற, பீடைகள் நீங்க, மனக்குழப்பம் தீர்ந்து தெளிவான சிந்தனை ஏற்பட கோயில்கள், நதிக்கரைகள், பசுமடம், சித்தர்கள் மகான்களின் ஜீவ சமாதிகள் போன்ற புனிதமான இடங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் மேற்சொன்ன நற்பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

கருத்து வேறுபாடுகளால் பிரிந்த உறவினர்கள், மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து முடித்த உடனேயே ஒரு அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதால் பிரிந்த உறவுகள் பகை தீர்ந்து ஒன்று சேர்வார்கள். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்சொன்ன முறையில் 2 கோயில்களுக்கும் சென்று வழிபடுபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள கடன் பிரச்சனை விரைவில் தீரும். புதன்கிழமைகளில் மேற்சொன்ன முறையில் இரு கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல வருமானம் உள்ள உத்தியோகம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

சில குடும்பங்களில் மாமியார் – மருமகள்களுக்கிடையே ஏற்படும் சண்டை காரணமாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தாலும் ஒரே வீட்டில் 2 அடுப்புகளை பற்ற வைத்து சமைப்பதை நாம் காண்கிறோம். ஒரே வீட்டில் 2 அடுப்புகள் எரிய எக்காரணம் கொண்டும் வீட்டில் இருப்பவர்கள் அனுமதிக்க கூடாது. ஒரு வீட்டில் இரண்டு அடுப்புகளை வைத்து சமைக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அவர்களின் வாழ்வில் கேடான பலன்களே அதிகம் ஏற்படும்.

- Advertisement -

பொதுவாக பெண்கள் இருக்கின்ற வீட்டில் பெண்கள் மட்டுமே அடுப்பு பற்றவைத்தல், விளக்கேற்றுதல் போன்ற செயல்களை செய்ய வேண்டும். வீட்டில் பெண்கள் இருக்கின்ற பொழுது ஆண்கள் இத்தகைய செயல்களை செய்வதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. திருமணமாகாத ஆண்கள் தங்களின் தனிப்பட்ட பூஜையறையில் தங்கள் கைகளால் விளக்கேற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோன்று சமையல் தொழில் புரியும் ஆண்களுக்கும், தினமும் தொழில், வியாபார தலங்களில் தீபம் ஏற்றும் ஆண்களுக்கும் அவர்கள் கைகளாலேயே மேற்சொன்ன காரியங்களை செய்வதால் பாதகமான பலன்கள் ஏதும் இல்லை.

கடன் என்கிற வார்த்தை வாங்குபவர்களுக்கும் பிடிக்காது, கொடுப்பவர்களுக்கும் பிடிக்காது. எனினும் சில சூழ்நிலைகளில் நாம் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படி கடன் வாங்கியே தீர வேண்டிய நிலையில் இருப்பவர்கள் வாரத்தில் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற எந்த தினத்தில் வேண்டுமென்றாலும் கடன் கொடுக்கவும், வாங்கவும் செய்யலாம். திங்கட்கிழமைகளில் கடனை கொடுப்பதாலும், வாங்குவதாலும் அது சங்கிலி தொடர் போல தொடர்ந்து வரும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். மேலும் கடன் வாங்க கொடுக்க நினைப்பவர்கள் அந்த நாளில் வருகின்ற சந்திர ஓரை நேரத்தைத் தவிர்த்து கடன் கொடுக்கவும், வாங்கவும் செய்யலாம்.

- Advertisement -