கடன் தொகையை சீக்கிரமே திருப்பித் தர பணத்தை இப்படி சேமித்து வையுங்கள். சேமிப்பு சில நாட்களிலேயே, பல மடங்காக உயரும். கடன் சீக்கிரமே அடையும்.

savings-money

நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை சேமித்து வைக்கின்றோமோ இல்லையோ, நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காவது, நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலை. நமக்கு மட்டும்தான் கடன் பிரச்சனை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப அவரவருக்கு இந்த கடன் பிரச்சனை இருந்துதான் வருகின்றது. கடனை சீக்கிரமே திருப்பிக் கொடுப்பதற்கு நிறையவே வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் உள்ளன. அந்த வரிசையில் மிக மிக சுலபமான, சக்தி வாய்ந்த ஒரு பரிகார முறையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadan

கடனைத் திருப்பித்தர தாந்திரீக ரீதியாக பணத்தை எப்படி சேமிப்பது? ஒரு சிறிய செம்பினால் செய்யப்பட்ட பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். டம்ளராக இருக்கலாம். சொம்பு போல இருக்கலாம். எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம். அந்த பாத்திரத்தை சுத்தமாக கழுவி, துடைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த பாத்திரத்திற்கு ஒரு மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வசம்பு, சிறிதளவு கல்லுப்பு, ஒரு விரலி மஞ்சள், ஐந்து வெந்தயம் இந்த பொருட்களை எல்லாம் ஒரு சிறிய தட்டில் வைத்து மஹாலக்ஷ்மியின் பாதங்களில் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பொருட்களை  தயாராக இருக்கும் செம்பு பாத்திரத்தில் உள்ளே போட்டு விட வேண்டும். அந்த செம்பு பாத்திரத்திற்க்கு மேலே ஒரு மஞ்சள் துணியை கட்டி, அந்த மஞ்சள் துணியில் ஒரு சிறிய துளையை போட்டு, உண்டியல் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

sembu-sombu

இப்போது இந்த உண்டியலில் நீங்கள் யாருக்கு கடன் தொகையை கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை சிறிய துண்டு பேப்பரில் எழுதி போட்டு விடுங்கள். பூஜை அறையில் வைத்து இந்த உண்டியலை தயார் செய்து, பூஜை அறை அல்லாமல் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இந்த உண்டியலை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உண்டியலை நீங்கள் தயார் செய்யப் போகும் அந்த நாள், உங்களுடைய ஜென்ம நட்சத்திர நாள் ஆக இருக்க வேண்டும்.

- Advertisement -

ஜென்ம நட்சத்திரத்தன்று தான் ஒரு தொகையை பூஜை அறையில் வைத்து, முடிந்தால் மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து, ஒரு தீபம் ஏற்றி மனதார உங்களுக்கு இருக்கக் கூடிய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு அந்த பணத்தை முதன்முதலாக, அந்த உண்டியலில் சேர்க்க வேண்டும். இப்படி மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய பிறந்த ஜன்ம நட்சத்திரம், வாரம்தோறும் வரக்கூடிய நீங்கள் பிறந்த கிழமை, நீங்கள் பிறந்த தேதி, இந்த நாட்களில் எல்லாம் அந்த உண்டியலில் பணத்தை சேமித்து வரலாம்.

vasambu 3

இந்த நாட்களில் மட்டும் தான் உண்டியலில் பணத்தை போடவேண்டுமா? நிச்சயம் கிடையாது. உங்களுடைய கைகளில் எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அந்த பணத்தை அப்போதெல்லாம் இந்த உண்டியலில் போட்டு வந்தாலும் தவறொன்றுமில்லை. சில நாட்களிலேயே அந்தப் பணம் சீக்கிரமே சேர ஆரம்பிக்கும். உங்களுடைய வருமானம் படிப்படியாக உயரும். ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் உயர்வதை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.

cash

சேமிப்பும் உண்டியல் பணமும் உயர்ந்து கொண்டே இருக்க உங்களுடைய கடனை அடைப்பதற்கு சரியான சந்தர்ப்பம் விரைவில் உங்களை வந்து சேரும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக கடன் பிரச்சினைக்கு நல்ல தீவினை சில நாட்களிலேயே பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.