வாழ்க்கையில் நல்ல நிலை பணம் பொருள் ஆரோக்கியம் அனைத்தும் உங்களை தானாக தேடிவந்து துன்பம் இல்லாமல் வாழ வேண்டுமானால் இனி நீங்கள் இப்படி வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

நாம் இறைவனை வணங்கும் போது நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் ஒரு பட்டியல் வைத்து கேட்க ஆரம்பித்து விடுவோம். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலை வாய்ப்பு வேண்டும். நமக்கு வருமானம் வேண்டும், வீட்டில் நகை வேண்டும், பணம் வேண்டும் என்று நம்முடைய கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே செல்வோம். இதை தவறு என்று சொல்ல முடியாது ஏனெனில் ஒரு மனிதனின் இயல்பே இது தானே. இறைவனிடம் மட்டுமே அவன் தனக்கு வேண்டியதை மனதார உருகி கேட்க முடியும். இதை குற்றம் என்று சொல்லுதலும் முறையல்ல. ஆனால் எந்த ஒரு வேண்டுதலையும் வைக்கும் முன்பு அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையையும் நாம் தெரிந்து கொண்டு கேட்க வேண்டும் இப்படி என்ன கேட்டால் நம் வாழ்வின் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதை தெரிந்து கொள்வதற்காக பதிவு.

நம்மை படைத்த இறைவனுக்கு நன்றாகவே தெரியும் நமக்கு எதை எப்போது தர வேண்டும். இருந்தாலும் நம் மனம் இதையெல்லாம் ஏற்க தயாராக இல்லை. வீடு வேண்டும், பணம் வேண்டும், பொருள் வேண்டும் என்று சதா எதையாவது வேண்டும் என்றே வேண்டிக் கொண்டு இருக்கிறோம். இந்த வேண்டுதல்களினால் நமக்கு நல்லதா என்பதை நான் யோசிப்பதில்லை பணம் ,பொருள் அனைவரும் வைத்து இருக்கிறார்கள் அதை எனக்கும் வேண்டும் இது மட்டுமே நாம் வேண்டும் போது நம் எண்ணத்தில் இருக்கும். இறைவனும் நாம் கேட்கிறோமே என்று நமக்கு நிச்சயமாக செய்து தருவார். ஆனால் இதன் மூலம் வரும் இன்ப துன்பங்கள் அவர் நன்கு அறிந்தே தான் தருவார். ஏனென்றால் கேட்டது நாம் தானே மனம் உருகி இறைவனிடம் கேட்கும் போது அவர் இல்லை என்று எப்படி கூறுவார் எனவே நாம் கேட்கும் வரத்தை நிச்சயமாக நமக்கு தருவார்.

- Advertisement -

அப்படி அவர் தந்த பிறகு அந்த வேண்டுதால் நாம் இன்பம் அடைகிறோமா துன்பம் அடைகிறோமா என்பது தான் கேள்வி. நமக்கு சில நேரங்களில் இதை செய்தால் நல்லதல்ல என்று இருக்கும். ஆனால் நாம் அதை ஏற்றுக் கொள்ள அவர்கள் செய்து விட்டார்கள் நானும் செய்ய வேண்டும் என்று நம் மனம் ஆசைப்படும் ஆசை தானே அனைத்து துன்பத்திற்கும் காரணம் கேட்டு கிடைத்த பிறகு அதை வைத்து அனுபவிக்க முடியாது வேண்டாம் என்று தூக்கிப் போடவும் முடியாமல் பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது இதை நினைத்து தினம் தினம் நாம் கவலை படுவதும்உண்டு.

இனி இறைவனை வணங்கும் போது இப்படி பட்டியல் வைத்து வணங்காமல். இறைவன் முன் நின்று அவனை ஒரு தடவை மனதார நினைத்து உருகி இப்படி ஒரு வரத்தை மட்டுமே நீங்கள் எப்போதும் இறைவனிடம் கேட்டாலே போதும். உங்கள் வாழ்க்கையில் துன்பத்திற்கே இடம் இல்லை.

- Advertisement -

தவறும் வழியில் நான் செல்லுகிற போது எனை தடுத்து ஆட் கொண்டு அருளல் வேண்டும்

உங்களின் வாழ்க்கை எந்த தீய பாதைக்கும் செல்லாமல் உங்கள் எண்ணங்களும் தீய வழி நோக்கி செல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் நிம்மதியாக வாழ உங்களுக்கு என்ன தேவையோ அதை இறைவன் கட்டாயமாக கொடுத்து உங்களுடன் எப்போதுமே இருந்து அருள் செய்வார்.

இதையும் படிக்கலாமே: குடும்ப தோஷமும், சாபமும் வாழ்க்கையில் முன்னேற விடாமல் துரத்துகிறதா? இந்த ஹனுமனை வழிபாடு செய்தால், பல தலைமுறை சாபம் விலகி, பல தலைமுறைக்கு உங்களுடைய குடும்பம் சீரும் செழிப்பாக வாழ்வாங்கு வாழும்.

படைத்த அவருக்கு நம்மை வழி நடத்தவும் தெரியும், காக்கவும் தெரியும் எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு உங்கள் பணிகளை மட்டும் நீங்கள் எப்போதும் சரியாக செய்து வந்தாலே போதும். அதற்கான பலனை கட்டாயமாக இறைவன் உங்களுக்கு தருவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -