என் உயிரின் அணுவினில் – காதல் கவிதை

Love kavithai

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
உன்னிடம் உள்ளதடி..
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிட
என் மனம் தவிக்குதடி..

Kadhal kavithai image
Kadhal kavithai image

மணிக்குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!
மௌனம் களைத்து நீ
எனக்குள் வந்து
எனைதான் வென்றாயோ

குயில்களின் பாடலும்
மயில்களின் ஆடலும்
ஒன்றாய் சேர்ந்தவளே..
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்து
அன்பை தந்தவளே.

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
உன் நினைவில் என் இரவு – காதல் கவிதை

காதலியை கண்டபோதெல்லாம் அவளை சிறு குழந்தை போல கொஞ்சிடம் மனம் என்னும். ஆனால் காலமும் சுழலும் அதற்கு ஏற்றவாறு எப்போதாவது தான் அமையும். அப்படி காதலியை கொஞ்ச துடிக்கும் நெஞ்சங்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம். இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.