காதலுக்கு விடுமுறை – காதல் கவிதை

Love kavithai

என்னைக் கட்டி இழுக்கும் காந்தச்சிமிழே…
தட்டி பறிக்கும் காட்டுக்குயிலே..
என் காலை கனவின் ஈரம் நீதானே
உன்னை காண துடிக்கும்
மன்னவன் நான் தானே..

Kadhal kavithai image
Kadhal kavithai image

சிறு பட்டாம் பூச்சியின்
வண்ணம் கண்டாலும்..
அதில் உன் முகத்தை
பார்த்து ரசிக்கிறேன்..
நான் சத்தம் போட்டு சிரித்து
மகிழ்ந்தாலும் உன் நினைவில்
வாடி தவிக்கிறேன்.

என்று முடியும் இந்த விடுமுறை
என்று எண்ணி காத்திருக்கிறேன்
நான் இங்கு.
என்னவளே உனை காண
விரைவில் வருவேன் நான் அங்கு.

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
காதலை சொல்ல நான் வேந்தன் – காதல் கவிதை

காதலிப்பவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பது சற்று பாரமாக தான் இருக்கும். அந்த இரு நாட்களும் ஏதோ ஒரு தனிமை சிறையில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பது போல உணர்வு ஏற்படும். அப்படி தவிக்கக்கூடியவர்களுக்கு இந்த விடுமுறை காதல் கவிதை சமர்ப்பணம். இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் நட்பு சம்மந்தமான கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.