என் காதலின் சோகம் – காதல் கவிதை

Kadhal kavithai

மனதில் ஒளிந்துள்ள சோகங்களை
சிலர் கண்ணீரில் வெளிப்படுத்துவர்
சிலர் புன்னகையில் வெளிப்படுத்துவர்
நான் இரண்டாவது ரகம்.

இதையும் படிக்கலாமே:
உன்னோடு நான் பேச – காதல் கவிதை

kadhal kavithai image
kadhal kavithai image

காதல் தரும் வலிகளை கற்பனையில் கூட யாராலும் அளக்க முடியாதது. அந்த அளவிற்கு கொடியது அந்த வலி. அதை பலர் தங்களது கண்களில் வழிந்தோடு கண்ணீரை கொண்டு வெளிப்படுத்துவர். தன் வார்த்தைகளால் திட்டி தீர்ப்பார். ஆனால் சிலரோ அனைத்து சோகத்தையும் தன் உள்ளத்தில் பூட்டி வைத்து சாகும்வரை உள்ளத்தில் அழுவார். ஆனால் வெளியில் எப்போதும் சிரித்து அடுத்தவரையும் சிரிக்க வைப்பர்.

Love kavithai image
Love kavithai image

இது காதல் தரும் வலியின் ரகம் கிடையாது. மனித உள்ளத்தின் ரகம். காதலின் ராகத்தில் வாழந்த அனைவருக்கும் அது எப்போதும் ஓயாத ஒரு மழைதான். தன்னுடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்களின் சமயத்தில் அவர்கள் எப்போதும் தங்களது பழைய காதலனையோ காதலியையோ நினைப்பதுண்டு என்பது தான் உண்மை.

அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.