உன்னோடு நான் பேச – காதல் கவிதை

Love kavithai

உன்னோடு நான் பேசாமல்
இருக்கும் வலியை விட..
உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை
எண்ணக்குள் கட்டிப்போட்டு
நான் நொடிக்கு நொடி சாகிறேனே
அது தான் வலிக்கிறது..

kadhal kavithai image
kadhal kavithai image

உன்னை நான் இனி நினைக்கமாட்டேன்
என்று கூறிவிட்டு
உன் நினைவுகளோடு தினம் தினம்
சண்டையிட்டு தோற்கிறேனே அது தான் வலிக்கிறது..
இனியும் இந்த யுத்தம் தொடர வேண்டாம்..
என்னோடு பேசிவிடு
என்னை மீண்டும் வாழ விடு அன்பே..

love kavithai image tanglish
love kavithai image tanglish

இதையும் படிக்கலாமே:
என் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை

பொதுவாக காதலர்கள் சண்டை இட்டுக்கொண்டால் சில நாட்கள் பேசுவது கிடையாது. ஆனால் அந்த சில நாட்கள் அவர்களுக்கு சில வருடங்களாக மாறும். வாய் வரும் வார்த்தைகள் ஆனால் அதை அவர்கள் பேசுவது கிடையாது. அலைபேசியில் அழைக்க துடிக்கும் மனம் ஆனால் ஏதோ ஒன்று தடுக்கும். அது தான் காதலின் விளையாட்டு.

காதல் கவிதைகள், காதல் பிரிவு கவிதைகள், நட்பு கவிதைகள் என பல பல கவிதை தொகுப்புகள் இங்கு உள்ளன.