காகத்தை வசியம் செய்து காட்டிய சித்தர் வீடியோ

Vasiyam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்கள் பலர் வசிய கலையில் வல்லவர்கள் என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. ஆனால் இன்று அந்த சித்தர்கள் யாரும் நம்மோடு வாழவில்லை என்றொரு கருத்து உண்டு. ஆனால் சித்தர்களின் அருள் பெற்ற சிலர் இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதில் சிலர் பல சித்து விலையாட்களையும் நடுத்துகின்றார். அதில் ஒன்றை தான் இப்போது காண போகிறோம்.

கையில் இருந்து திருநீறு வரவைப்பது, நாம் கொடுக்கும் பொருட்களை கொண்டு சித்து விளையாட்டு புரிவது, ஆணியை மந்திரத்தால் வளைத்துக்காட்டுவது போன்ற பல விஷங்களை சாதாரணமாக செய்து காட்டுகிறார் பாலகிருஷ்ணன் சித்தர். இவருக்கு பதினாறு வயது இருக்கும் சமயத்தில் ஒரு சித்தரை சந்தித்து அவருடன் சில ஆண்டுகள் இருந்து இந்த சித்து விளையாட்டுக்களை கற்றுக்கொண்டுள்ளார்.

சில ஆண்டுகளின் இவரின் குரு ஜீவ சமாதி அடைந்துவிட்டதாகவும் அதன் பிறகு இன்றும் சூட்சும வடிவில் அவர் தனுக்கு உதவுவதாகவும் பாலகிருஷ்ணன் கூறுகிறார். இவர் இன்று வரை சித்தர்களை வணங்கிவருவதாகவும் அவர்களின் அருளோடு தான் இந்த சித்து விலையாட்களை புரிவதாகவும் அவர் கூறுகிறார். இன்றும் ஏதாவது ஒரு அதிசயம் புரிவதற்கு முன்பு சித்தர்களிடம் அனுமதி பெற்றே அவர் அதை செய்கிறாராம்.