இந்த வெயில் காலத்தில் உங்க ரோஜா செடி எல்லாம் வாடி வதங்கி இருக்கா கவலையை விடுங்க. இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க செடி நல்லா தள தளன்னு பூத்து குலுங்கும்.

rose-uram-dry-leave
- Advertisement -

செடி வளர்க்க வேண்டும் என்றாலே நாம் முதலில் தேர்ந்தெடுப்பது ரோஜா செடியை தான். இதை மற்ற காலங்களில் பராமரிப்பு என்று பெரிதாக எதையும் செய்யவில்லை என்றாலும், வெயில் காலங்களில் இதை கொஞ்சம் கவனமாக தான் பார்க்க வேண்டும். இப்போது அதை குறித்தான சில தகவல்களைத் தான் இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெயில் காலத்தில் ரோஜா செடியை பாதுகாப்பது எப்படி:
ரோஜா செடியை பொறுத்த வரையில் எப்போதும் வெயிலான இடத்தில் தான் வைக்க வேண்டும். இது எல்லா வகை ரோஜா செடிக்கும் பொருந்தாது. நம்முடைய சீதோசன நிலைக்கு ஏற்றவாறு உள்ள ரோஜா செடிகள் மட்டும் தான் வெயில் வைத்தாலும் வாடாமல் வளரும். மற்ற வகை ரோஜா செடிகள் வெயிலில் நிச்சயம் வாடத் தான் செய்யும். அப்படி வாடிய செடிகளை மறுபடியும் தளிர்க்க வைக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

இந்த முறையில் செடி வளர வாடிய செடியில் பச்சையம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மறுபடியும் அதில் தளிர்களை வர வைக்க முடியும். செடி முழுவதுமாக காய்ந்து வேர் வரை காய்ந்திருந்தால் தளிர்களை வர வைப்பது கடினம்.

முதலில் வாடிய ரோஜா தொட்டியை நிழல் பாங்கான இடத்திற்கு மாற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு செடியின் காய்ந்த இலைகள், கிளைகள் அனைத்தையும் வெட்டி எடுத்து விடுங்கள். இதை செய்யாமல் விட்டால் செடியின் மற்ற பாகங்களும் வாடி விடும். அதன் பிறகு செடியின் வெட்டிய கிளையில் வேப்பெண்ணை அல்லது மஞ்சள் இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்து விடுங்கள். இதன் மூலம் செடி மேலும் வாடாமல் இருக்கும்.

- Advertisement -

அடுத்து தொட்டியில் உள்ள மண்ணை மேலாக கிளறி அதன் மேல் காய்ந்த இலை தழைகள், மண்புழு உரம் இப்படி ஏதேனும் ஒன்றை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். இது எதுவும் இல்லாத பட்சத்தில் தேங்காய் நார் இருந்தாலும் அதையும் மேலே போட்டு விடலாம். இதன் மூலம் வெயில் நேரடியாக மண்ணில் பட்டு செடி வாடாமல் ஓரளவிற்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த மண் கலவையுடன் எப்சம் சால்ட் ஒரு ஸ்பூன் எடுத்து செடியின் மேல் படாமல் சுற்றி இருக்கும் மண்ணில் கலந்து வைத்து விடுங்கள். இது செடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆனால் இதை அதிகமாக கொடுத்து விடக் கூடாது.

இப்படி மாற்றி வைத்த தொட்டியில் ஈரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மண் லேசாக காய்ந்தால் கூட தண்ணீரில் உடனே ஊற்றி விடுங்கள். இதை செய்யும் போது பத்து நாட்களுக்குள்ளாகவே இந்த செடியில் புதிதாக தளிர்கள் வர ஆரம்பித்து விடும்.

இதையும் படிக்கலாமே: என்ன! வெயில் காலத்தில் ரோஜா செடி வாடாமல் இருக்க கல்லு கொடுக்கணும்மா?. இது என்ன புதுசா இருக்கு. வெயிலின் தாக்குதலில் இருந்து ரோஜா செடியை காக்க இதோ சூப்பர் டிரிக்ஸ்.

வாடிய ரோஜா செடிகளை இந்த முறையில் செய்து பாரமரித்து பாருங்கள். நிச்சயம் ரோஜா செடியில் தளிர்கள் வைத்து நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி

- Advertisement -