கை ரேகையை வைத்து உங்களின் வாழ்க்கை துணையுடைய குண நலன்களை தெரிந்து கொள்ளலாம்

kai-regai-palan

கைரேகை ஜோதிடத்தை வைத்து நம்முடைய வாழ்க்கைத் துணையின் குணநலன்களையும், அல்லது காதலன் காதலியின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் பல வகைகள் இருந்தாலும் அதில் ஒன்று தான் இந்த கைரேகை ஜோதிடம். நம் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகளை மற்றவர்களிடம் ஒப்பிடும்போது மாறுபாடுகள் இருக்கும். அதில் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் இருக்கும் சில ரேகைகளின் வேறுபாட்டினை நம்மால் காண முடியும். அப்படி அனைவருக்கும் நம் கைகளில் கட்டாயம் இருக்கும் ஒரு ரேகை தான் இதய ரேகை. இந்த இதய ரேகையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

முதலாவதாக கைரேகை ஜோதிடமானது ஆண்களுக்கு ஏன் வலது கையில் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு ஏன் இடது கையில் பார்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் நாம் அறிந்து கொள்வோம். சூரிய கலை என்னும் மூச்சுக்காற்று ஆண்களின் உடலின் வலப்பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துகிறது. இதனால் அவர்களுக்கு ரேகை வலது கையில் பார்க்கப்படுகிறது. சந்திரக்கலை எனும் மூச்சுக்காற்று பெண்களுக்கு இடது பக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களுக்கு இடது கையில் ரேகை பார்க்கின்றோம்.

ஒருவருடைய உள்ளங்கையில் சுண்டு விரலுக்கு கீழ்ப்பக்கம் வெளிப்புறத்திலிருந்து ஆள்காட்டி விரலை நோக்கி அழுத்தமாக செல்லும் ரேகை தான் இதய ரேகை. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு இந்த இதய ரேகையை காணவேண்டும். இந்த ரேகையானது மூன்று விதமாக காணப்படும். 1. இடது கையை விட வலது கையிலுள்ள இதய ரேகையானது சற்று உயரமாக இருக்கும். 2. வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக இருக்கும். 3. இந்த இரண்டு இதய ரேகையும் ஒரே கோட்டில் இருக்கலாம். இந்த இதய ரேகையை வைத்து தான் ஒருவருடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை அமைகின்றது என்பதை கைரேகை ஜோதிடம் கூறுகின்றது. இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து வைக்கும் போது இதய ரேகை ஆனது எப்படி இருந்தால் என்ன பலன் என்பதை பற்றி காண்போமா. இதில் கூறப்படும் பலன்கள் எல்லாம் பொதுவான பலன்கள் மட்டுமே. துள்ளியமாக கணிக்கப்பட பிறந்த நேரமும், ஜாதகமும் அவசியம்.

kai-regai-palan

வலது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்

- Advertisement -

1. சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
2. வயதில் பெரியவர்களை மதிக்கும் பண்பினை பெற்றிருப்பீர்கள்.
3. மற்றவர் நிலையை பற்றி நன்கு அறிந்து கொள்ளும் திறமை உள்ளவர்களாக இருப்பீர்.
4. உங்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்லவராக இருப்பார்.
5. எளிதில் காதல் பயப்படுவார்கள்.
6. காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
7. மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கருதி செயல்பட மாட்டார்கள்.
8. தன் சொந்த யோசனையில் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்

1. சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்
2. தன்னம்பிக்கை உடையவர்கள் இவர்கள்.
3. வெற்றி பெற்று காட்டும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
4. சவால்களை மேற்கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்
5. கோபம் மற்றும் ஆக்ரோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
6. மற்றவர்களை ஈர்க்கும் வசீகரமும் கவர்ச்சியும் இருக்கும்.
7. இவர்கள் எளிதில் காதல் பயப்பட மாட்டார்கள். அப்படி காதல் வயப்பட்டால் நேர்மையான காதலராக இருப்பார்கள்.

Kai regai

இரண்டு கைகளின் இதய ரேகைகளும் ஒரே கோட்டில் இருந்தால்

1. உறுதியான மனது, அழகான தோற்றம், மென்மையான இதயம், கொண்டவர்கள் இவர்கள்.
2. இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். நிலையான ஓர் உறவை விரும்புவார்கள்.
3. அன்பிற்கும் காதலுக்கும் ஏயங்கும் மனம் கொண்டவர்கள்.
4. மற்றவர்களுக்கு மதிப்பளிப்பார்கள்.
5. விவேகமானவர்கள், பொது அறிவு மேலோங்கி இருக்கும்.
6. திடீரென நடக்கும் மாற்றங்கள் பிடிக்காது.
7. பெற்றோர் பார்த்து வைக்கும் வாழ்க்கை துணையை தான் திருமணம் செய்து கொள்வார்கள்.
8. வாழ்க்கைத்துணை இவர்கள் மீது கொள்ளை பிரியம் வைத்து நன்கு புரிந்து அனுசரித்து நடந்து கொள்பவராக இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே
உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்

கைரேகை ஜோதிடம் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kairegai jothidam in Tamil. Kai regai palangal. Kai regai jothidam. kai regai jothida palan. Kai regai benefits.