வாசலில் இந்தக் கோலம் போட்டால், நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழையவே மாட்டாள்.

kolam2
- Advertisement -

நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் வருகைக்காக தான் நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம். தினமும் காலையில் எழுந்து வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து, சாணம் தெளித்து கோலம் போட்டு மகாலட்சுமியை வரவேற்கின்றோம். இந்த மார்கழி மாத சமயத்தில் இன்னும் சிறப்பாக கோலத்திற்கு வண்ணங்களை போட்டு வீட்டிற்குள் நுழையும் இறை சக்தியை இன்னும் மகிழ்ச்சியோடு அழைக்கின்றோம். ஆனால் கோலத்தில் அழகு சேர்ப்பதற்காக என்று சொல்லி நாம் சில தவறுகளை பண்டிகை காலங்களில் செய்யவே கூடாது.

பண்டிகை காலங்களில் வாசலிலை மேலும் மேலும் அழகு சேர்ப்பதற்காக, வண்ணக் கோலங்களை நம்முடைய வீட்டு வாசலில் நிச்சயமாக போட வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் சில பேர் இப்போது அழகிற்காக கலர் கோமாவில் கல் உப்பைக் கலந்து போடக்கூடிய பழக்கத்தை வைத்துள்ளார்கள்.

- Advertisement -

கல்லுப்பு என்பது நாம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கக்கூடிய ஒரு பொருள். இந்த பொருளை கோலமாவில் கலந்து வாசலில், கோலத்தில் தூவி விடுவது என்பது, கல் உப்பை அனாவசியமாக தரையில் இரைப்பதற்கு சமம். சமைக்கும்போது ஒரு கல் உப்பு கீழே சிந்திவிட்டால் கூட, அது தவறு என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். இப்படிப்பட்ட லட்சுமி அம்சம் பொருந்திய அந்த உப்பை நிலை வாசலிலேயே கலர் கோலமாவு சேர்த்து கொட்டி வைப்பது அவ்வளவு சரியான முறை அல்ல.

அழகுக்காக தேவைப்பட்டால் வேறு ஏதாவது பொருட்களை கலந்து கூட கோலமாவில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக இந்த கல் உப்பை பயன்படுத்தும் பழக்கத்தை விட்டு விடுவது நல்லது. இதேபோல் எந்த நல்ல நாளாக இருந்தாலும், விசேஷ நாளாக இருந்தாலும் நீங்கள் போடக்கூடிய கோலத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய வண்ணத்தில் நிச்சயமாக காவி இருக்க வேண்டும். சில இடங்களில் இந்த காவி பொடியை செம்மண் என்றும் சொல்லுவார்கள். காவி என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீக ரீதியில் பார்த்தால் லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் ஒரு பொருள் காவி.

- Advertisement -

அதுவே அறிவியல் ரீதியாகப் பார்த்தால் காவி தீட்டி கோலம் போட்டால் பூச்சி பொட்டுகள் வீட்டிற்குள் அண்டாது என்று சொல்லுவார்கள். அந்தக் காலத்தில் குடிசை வீடுகளில் காவி தீட்டி தான் அதன் மேலே கோலம் போடும் வழக்கம் இருந்தது. சிவப்பு நிற காவியில், பச்சரிசி மாவில் போடப்பட்ட வெள்ளை நிற கோலம் பளிச்சென்று கண்ணை பறிக்கும். பார்க்க கண் கோடி தேவை. அந்தக் காலத்தில் குடிசை வீடுகளில் பூச்சி பொட்டு பிரச்சனை இருக்கும். அதை தவிர்ப்பதற்காக கூட காவியை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் காவி போடும் வழக்கமும் இன்று படிப்படியாக குறைந்து விட்டது.

வரக்கூடிய பொங்கல் திருநாள் அன்று உங்கள் வீட்டு நிலை வாசலில், அழகாக காவித் தீட்டி அதை நன்றாக உலர வைத்து அதன் பின்பு, அதற்கு மேலே அரிசி மாவில் கோலம் போட்டு, கலர் கலரான வண்ணப் பொடிகளைத் தூவி கோலத்தை அழகு படுத்துங்கள். அது உங்களுக்கு சுபிட்சத்தை தரும். அழகுக்காக நிலை வாசலில் எந்த கோலம் வேண்டுமென்றாலும் போடலாம். என்னதான் கோலம் லட்சுமியின் சொரூபமாக இருந்தாலும் சரி, அந்த கோலத்தில் கல்லுப்பைக் கலர் மாவில் கலந்து, தரையில் இரைத்து வைக்கக்கூடாது என்ற ஒரு கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -