பல்லி பரிகாரம்

Palli pariharam in Tamil
- Advertisement -

நம் வீட்டில் எண்ணற்ற வகை விலங்குகள் நமக்கு தெரியாமலேயே இருக்கின்றன. அதில் ஒரு விலங்கு தான் பல்லி. இந்த பல்லி நம் வீட்டில் இருந்து கொசுக்கள், பூச்சிகளை ஒழித்து நமக்கு நன்மைகளை செய்கிறது. பல்லி தெய்வீகத்தன்மை நிறைந்த ஒரு விலங்காக கருதப்படுகிறது. அதே நேரம் இந்த பல்லி ஒரு மனிதனின் உடலின் மீது எதிர்பாராத விதத்தில் விழும் பட்சத்தில், அது விழுகின்ற உடற்பாகம் பொறுத்து அது நன்மை அல்லது தீமையான சகுனத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது. இப்படி பல்லி நம் மீது எதிர்பாராத பட்சத்தில் விழும் பொழுது, அந்த பல்லி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பல்லி பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பல்லி தோஷம் விலக பரிகாரம்

மனிதர்களின் உடலில் வயிறு, தொப்புள், நெஞ்சு ஆகிய பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பல்லி விழுந்தால் அவை தீய சகுனங்களை குறிக்காது என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் ஆணுக்கு உடலில் வலது பக்கத்திலும், பெண்ணுக்கு உடலின் இடது பக்கத்திலும் பல்லி விழுந்தால் அதுவும் தோஷமாகாது எனக் கூறப்படுகின்றது.

- Advertisement -

பல்லி தங்களின் மீது விழுந்தவுடன் தங்களுக்கு தோஷம் ஏற்பட்டதாக கருதுபவர்கள் உடனடியாக குளியலறைக்கு சென்று குளித்து விட வேண்டும். பிறகு வீட்டின் பூஜை அறைக்கு சென்று ஒரு சிறிய மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி, உங்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு சிவபெருமானுக்குரிய மகாமிருத்யுஜய மந்திர பாராயணம் செய்ய வேண்டும். இந்தப் பரிகாரம் செய்வதால் நம் உடலில் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.

பஞ்சகவ்யம் என்பது பசு மாட்டின் (பால், தயிர், நெய், சிறுநீர், சாணம்) என்கிற ஐந்து பொருட்களை கலந்து செய்யப்படுகின்ற ஒரு பாரம்பரிய இயற்கை வைத்திய பொருளாகும். தங்களின் உடலின் மீது பல்லி விழுந்து அதனால் தோஷம் ஏற்பட்டுள்ளதாக கருதுபவர்கள், பஞ்சகவ்வியத்தை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு தண்ணீர் அருந்தினால் பல்லி விழுந்த தோஷம் விலகுவதாக ஐதீகம் என கூறப்படுகிறது.

- Advertisement -

தங்களின் உடலின் மீது பல்லிகள் எதிர்பாராமல் விழுந்ததால் தோஷம் ஏற்பட்டதாக கருதுபவர்கள் வசதி இருப்பின் தங்கத்தால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பொருளை ஒரு கோயிலுக்கு தானம் வழங்குவதால் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷம் போவதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சனி பகவான் பரிகாரம்

சனிக்கிழமை தினத்தில் வெள்ளை எள் தானியங்களை பிறருக்கு தானம் செய்ய வேண்டும். அதேபோன்று கோயில்களுக்கு தீபமேற்ற மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை தானம் செய்வதும் பல்லி விழுந்த தோஷத்தை போக்குவதற்குரிய பரிகாரமாக பரிந்துரைக்கப்படுகிறது.

- Advertisement -