கால சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த பரிகாரங்களை செய்யலாம்

Kala sarpa dosha pariharam in Tamil
- Advertisement -

ஜாதகத்தில் இருக்கின்ற நவகிரகங்களில் ராகு மற்றும் கேத்து ஆகிய இரு கிரகங்களுக்கு இடைப்பட்ட வீடுகளில் மற்ற ஏழு கிரகங்களும் இருந்தால் அது கால சர்ப்ப தோஷம் இருக்கின்ற ஜாதகமாக கருதப்படுகிறது. இந்த காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் தங்களின் வாழ்வில் பல வகையான துன்பங்களை அனுபவிக்க கூடிய விதி அமைப்பை பெறுகிறார்கள். எனவே இந்த தோஷத்தால் வாழ்வில் பல துயரங்களை அனுபவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட செய்ய வேண்டிய காலசர்ப்பதோஷ பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

காலசர்ப்ப தோஷத்தை போக்குகின்ற பரிகார பூஜைகளை செய்யும் திருக்கோயில்களாக மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் இருக்கின்ற அருள் மகாகாளேஸ்வரர் கோயில், ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயில் மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ நாகநாத சுவாமி பிறைசூடி அம்மன் ஆகிய கோயில்கள் இருக்கின்றன. இத்திருக்கோயில்களுக்கு சென்று, கோயிலில் இருக்கின்ற வேதியர்களைக் கொண்டு முறைப்படி கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்து வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள அந்த தோஷத்தின் பாதிப்புகள் நீங்கி வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளை அளிக்க கூடிய தெய்வமாக இருப்பவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். எனவே வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, பழம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் தினந்தோறும் அனுமன் சாலிசா துதித்து வருவதாலும் கால சர்ப்ப தோஷத்தின் தீவிர தன்மையை குறைத்து நற்பலன்களை ஆஞ்சநேயர் வாரி வழங்குவார்.

உங்களுக்கு அருகில் இருக்கின்ற சிவன் கோயில்களில் ராகு – கேது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால், அந்த சிலைகளுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மஞ்சள், குங்குமம் மற்றும் காய்ச்சாத பசும்பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். தினந்தோறும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபாடு செய்து வருவதாலும் ஜாதகத்தில் இருக்கின்ற கால சர்ப்ப தோஷம் வீரியம் குறையும். கால சர்ப்ப காயத்ரி மந்திரத்தை துதித்து வருவதும் இந்த தோஷத்திற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது.

- Advertisement -

ஜாதகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கால சர்ப்ப தோஷத்தால் வாழ்வில் சங்கடங்களை சந்திப்பவர்கள், மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி தினத்தன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானையும் அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அன்றைய தினம் வறிய நிலையில் இருக்கின்ற மக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வதாலும் இந்த தோஷத்தின் கடுமை குறைந்து நற்பலன்கள் கிடைக்க பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: கண் திரிஷ்டி பரிகாரம்

வீட்டில் தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்களுக்கு அருகாமையில் ஏதேனும் அரச மரம் இருந்தால், அதன் வேருக்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். அதிகாலையில் செய்ய முடியாதவர்கள், அன்றைய தினம் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக மாலை வேலையிலும் செய்யலாம்.

- Advertisement -