களத்திர தோஷ பரிகாரம்

kalathara thosam pariharam in tamil
- Advertisement -

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ணினால் வருகின்ற 7 ஆம் இடம் “களத்திரம்” எனப்படும். திருமணத்தைக் குறிக்கின்ற இடமான இந்த களத்திர ஸ்தானத்தில் பாப கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு களத்திர தோஷம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதனால் அந்த நபர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இப்படி ஜாதகத்தில் களத்திர வருஷம் ஏற்பட்டு, அதனால் திருமண வாழ்க்கை அமையாமல் தவிக்கின்ற ஆண் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற செய்ய வேண்டிய களத்திர தோஷ பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

களத்திர தோஷ நீங்க பரிகாரம்

பொதுவாக நம் வாழ்க்கையில் நடைபெறும் எந்த ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கும், குலதெய்வத்தின் அருட்கடாச்சம் கட்டாயம் தேவை. எனவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கின்ற பொழுது குலதெய்வ கோயிலுக்கு சென்று, வழிபாடு செய்ய வேண்டும். ஆடி மாதத்திலோ அல்லது ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து, படையல் போட்டு வழிபாடு செய்வதாலும் குலதெய்வத்தின் அருள் கிடைத்து அந்த ஜாதகருக்கு களத்திர தோஷ பாதிப்புகள் நீங்கி, மிக விரைவிலேயே அந்த ஜாதகர்களுக்கு திருமணம் நடைபெறும்.

- Advertisement -

ஜாதகத்தில் களத்திர தோஷம் ஏற்பட்டு அதனால் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் நடைபெறாமல் போகும் பட்சத்தில், தங்கள் இல்லத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று 9 சுமங்கலி பெண்களை அழைத்து, அவர்களுக்கு விருந்து அளித்து புடவை, ரவிக்கை துணி, வளையல்கள், சீப்பு, பழம், பூ, பொட்டு போன்ற மங்களப் பொருட்களை தானம் தந்து, அவர்களிடம் ஆசிகளை பெறுவதால் களத்திர தோஷம் நீங்கி மிக விரைவிலேயே ஜாதகர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் குருபகவானின் அம்சமாக சிவபெருமானே அருள்புரியும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்தகாயேஸ்வரர் – ஏலவார்குழலி சமேத திருக்கோயிலுக்கு சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வணங்கி, வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அங்குள்ள நவகிரக சன்னதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கோவிலை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். இந்த வழிபாட்டை ஒரு வளர்பிறை வியாழக்கிழமை தினத்தில் செய்வது சாலச் சிறந்ததாகும்.

- Advertisement -

தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டத்தில் இருக்கின்ற திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் – கோகிலா அம்மன் திருக்கோவிலுக்கு சென்று, சிவபெருமானையும் அம்பாளையும் வழிபாடு செய்து அக்கோயிலிலேயே களத்திர தோஷ நிவாரண பூஜை செய்து வழிபாடு செய்வதாலும், களத்திர தோஷம் கொண்ட ஜாதகர்களுக்கு மிக விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று, சிவபெருமானுக்கு வெள்ளை நிற தாமரைப் பூவை சமர்ப்பித்து, வழிபாடு செய்து வர வேண்டும். வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கின்ற பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்குவதால், ஜாதகத்தில் இருக்கின்ற களத்திர தோஷத்தின் பாதிப்புகள் குறைந்து திருமண யோகம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: தோஷ பரிகாரம்

திருமணம் செய்ய பொருளாதார வசதி இல்லாத ஏழ்மை நிலையில் இருக்கின்ற மணமகன் மற்றும் மணமகளுக்கு தங்களின் பொருளுதவியால் திருமணம் செய்து வைப்பதாலும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற களத்திர தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக அமைகிறது.

- Advertisement -