பல வகையான தோஷ பரிகாரம்

thosam pariharam in Tamil
- Advertisement -

தோஷம் என்றால் குறைபாடு என்று பொருள். அதாவது ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதேனும் ஒன்று அல்லது எல்லா கிரகங்களுமே பாதகமாக இருந்தால் அது தோஷம் உள்ள ஜாதகம் என கருதப்படுகிறது. இப்படி தோஷத்தை பெற்றவர்கள், அதிக பொருள் செலவு செய்து அதற்கான பரிகாரத்தை செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அந்த வகையில் ஒரு சில கிரக தோஷங்களுக்கு மிக எளிமையான முறையில் செய்ய வேண்டிய சில தோஷ பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

தோஷ பரிகாரங்கள்

தற்காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்களுக்கான சொந்த வீடுகளை கட்டி குடியேறுகின்றனர். எனினும் எந்த ஒரு வீட்டையும் 1 சதவீத வாஸ்து தோஷம் கூட இல்லாதது என கூறிவிட முடியாது. எதிர்பாராத வகையில் தங்கள் வீட்டிற்கு வாஸ்து ரீதியிலான குறை ஏற்பட்டு, அதனால் வாஸ்து தோஷம் ஏற்பட்டதாக கருதுபவர்கள் ஒரு படிகத்தால் செய்யப்பட்ட மிகச் சிறிய அளவிலான ஒரு சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தேய்பிறை பிரதோஷ தினத்தன்று சிறிய அளவிலான ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் அந்த சிவலிங்கத்தை வைத்து உங்கள் வீட்டின் ஹால் பகுதியில் வைத்து விடுவதால், வீட்டிற்கு ஏற்பட்டிருக்கின்ற வாஸ்து தோஷத்தை போக்கும். லிங்கம் வைக்கப்பட்டிருக்கின்ற கண்ணாடி கிண்ணத்தில் இருக்கின்ற தண்ணீரை தினந்தோறும் மாற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஜாதகத்தில் பித்ரு தோஷம் ஏற்பட்டு அதனால் வாழ்வில் சிக்கல்களை அனுபவிப்பவர்கள் தினந்தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதால் பாதகமான விடயங்கள் ஏற்படாமல் காக்கும். தங்களால் இயன்ற பொழுது கோயில் குளங்களில் இருக்கின்ற மீன்களுக்கு உணவு விட வேண்டும். அதேபோன்று கோயில் வளாகங்களில் இருக்கின்ற எறும்புகளுக்கு அரிசி மாவு, வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகளை உணவாக கொடுப்பதும் இந்த பித்ரு தோஷத்தை போக்கக்கூடிய மிக எளிமையான பரிகாரமாக இருக்கின்றது.

நவகிரகங்களில் சந்திர பகவான் என்பவர் ஒரு மனிதனின் மனதிற்கு காரகத்துவம் கொள்கிறார். அப்படிப்பட்ட இந்த சந்திர பகவான் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தால் அவருக்கு மனக்குழப்பம், எதிலும் வெற்றி பெற முடியாத நிலை போன்றவை ஏற்படும். இந்த சந்திர கிரக தோஷம் நீங்க அந்த தோஷம் கொண்டவர்கள் தினமும் தங்களின் தாயாரின் கால்களை தொட்டு வணங்குவது அந்த தோஷத்தின் பாதிப்பை வெகுவாக குறைக்கும். மேலும் ஏழ்மை நிலையிலிருக்கின்ற பெண்களுக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்வதும் சந்திர கிரக தோஷத்தின் பாதிப்புகளை வெகுவாக குறைத்து விடும்.

- Advertisement -

செவ்வாய் தோஷம் ஏற்பட்டு அதனால் இல்லற வாழ்க்கை மற்றும் தொழில், வியாபாரங்களில் பலவித இன்னல்களை அனுபவிப்பவர்கள், சிவப்பு பருப்பு பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தங்களின் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருக்கின்ற நபர்களுக்கு தங்களால் என்ற பொருளுதவிகளை செவ்வாய்க்கிழமைகளில் செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற செவ்வாய் கிரக தோஷத்தின் பாதிப்புகள் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: பூர்வ புண்ணிய தோஷ பரிகாரம்

ஷம் தான் பெரும்பாலானவர்களை பாடாய்படுத்தி விடுகிறது. இந்த சனி தோஷம் ஏற்பட்டு அதனால் துன்பப்படுபவர்கள் சனிக்கிழமைகள் தோறும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் சமூகத்தில் அடிமட்ட நிலையில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யலாம். அல்லது அவர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் போன்றவற்றை செய்வதாலும் சனி பகவானின் மனம் குளிர்ந்து சனி தோஷத்தால் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் காத்தருள்வார்.

- Advertisement -