திருமணத்திற்கு பிந்தைய களத்திர தோஷ பரிகாரம்

kalathra dosham pariharam after marriage in tamil
- Advertisement -

ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, மற்றும் ராகு – கேது ஆகிய கிரகங்கள் 1,2,4,7,8 மற்றும் 12 ஆம் வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த களத்திர தோஷம் ஏற்பட்டிருக்கும் நபர்களுக்கு காலதாமதமாக திருமணம் நடைபெறும். அப்படி திருமணமானவர்களுக்கும் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு சிலர் தங்களுக்கு வருகின்ற வாழ்க்கை துணை இத்தகைய களத்திர தோஷம் கொண்டவர்கள் என்பது தெரியாமல் திருமணம் செய்து கொண்டு விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு திருமணத்திற்கு பிந்தைய களத்திர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

களத்திர தோஷ பரிகாரம் – திருமணத்திற்கு பின்பு

திருமணத்திற்கு பின்பு களத்திர தோஷ நீங்க பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் ஒரே வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவப்பு நிற ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளி அல்லது பித்தளை தட்டை எடுத்து, அதில் உங்கள் மோதிர விரலால் குங்குமத்தை சிறிது நீர் விட்டு குழைத்து, அந்த தட்டில் முக்கோணம் ஒன்றை வரைய வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்தத் தட்டில் சிறியளவு சந்தன கட்டை, சிவப்பு நிற மலர்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான லட்டு, கேசரி போன்ற உணவை வைக்க வேண்டும். அதனுடன் வாசனை மிகுந்த சாம்பிராணி ஏற்றி, ஒரு சிறிய அளவில் மண் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி அந்த தட்டில் வைக்க வேண்டும். பிறகு இந்த தட்டை உங்கள் பூஜை அறையில் கடவுளின் படத்திற்கு முன்பாக வைத்து, உங்களின் களத்திர தோஷம் நீங்க மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜை செய்கிற தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

விரதம் அனுஷ்க முடியாதவர்கள் உப்பு சேர்க்காத மோர், சர்க்கரை சேர்க்காத பால், தேனீர், காபி போன்றவற்றை அருந்தலாம். மாலை முடிந்து இரவு வேலை தொடங்கும் நேரத்தில் சப்பாத்தி, வெல்லம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை செய்தளவு உணவாக அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். களத்திர தோஷம் இருப்பது தெரியாமல் திருமணம் செய்து, அதனால் பாதிப்புகளை சந்திப்பவர்கள் இந்த பூஜையை ஒவ்வொருவரும் செவ்வாய்க்கிழமை அன்றும் செய்து வருவதால் களத்திர தோஷ பாதிப்புகள் நீங்கி, இல்லற வாழ்வு இனிமையானதாக மாறும்.

- Advertisement -

எப்படிப்பட்ட களத்திர தோஷங்களையும் போக்கக்கூடிய ஆற்றல் முருகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய இரண்டு தெய்வங்களுக்கு உண்டு. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உணவு காபி, டீ போன்ற எதையும் அருந்தாமல் அனுமன் சாலிசா துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தம்பதிகள் இருவரும் செய்வது நல்லது.

அதேபோன்று செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த இரண்டையும் முறையாக செய்பவர்களுக்கு முருகனின் அருளால் திருமணத்திற்கு பிறகு களத்திர தோஷத்தால் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

களத்திர தோஷம் இருந்து திருமணம் செய்து கொண்ட ஆணும் – பெண்ணும் தங்களுக்கு அந்த தோஷத்தால் பாதிப்பு ஏற்படாமலிருக்க தம்பதிகள் இருவரும் பவளம், ரெட் ஒனிக்ஸ் (Red Onyx), கார்னேலியன் (Carnelian) போன்ற செவ்வாய் பகவானுக்குரிய நவரத்தின கற்களில் ஏதேனும் ஒன்றை வெள்ளியில் பதித்து, கணவன் வலது கை மோதிர விரலிலும், மனைவி இடது கை மோதிர விரலிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உப்பு பரிகாரம்

களத்திர தோஷம் இருப்பது தெரியாமல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று, சிவபெருமானுக்கு வெள்ளை நிற தாமரை மலரை சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -