களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை

Love kavithai

வார்த்தைகள் ஏதும் பேசாமல்
விழியால் கொல்பவளே..
உனக்கெப்படி புரியவைப்பேன்
உன் விழியன் அம்புகள் என்னை
விடாமல் தாக்குவதை..

ஒரு வாரத்தை பேச சொன்னால்
மௌனமாய் சிரித்து செல்கிறாய்..
உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால்
என்னை மொத்தமாக களவாடுகிறாய்..

போதுமடி உன் மௌன நாடகம்
உன் காதல் அம்பு பட்டு துடிக்கும்
இந்த இதயத்திற்கு துளி அளவேனும்
இரக்கம் காட்ட கூடாதா…

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
அவள் இன்றி நான் – காதல் கவிதை

பெண்களின் விழிகளுக்கு இணையான ஒரு அழகு இவ்வுலகில் வேறு உண்டோ. அவர்கள் விழிகள் தான் எத்தனை மாயங்கள் செய்கிறது. காதல் அம்பும், கருணை பார்வையும் ஒருசேர வீசும் ஓராயிரம் புயல்கள் அவர்கள் விழிகள். மௌனத்திலும் அவர்கள் விழிகள் ஓராயிரம் வார்த்தைகளை ஓயாமல் பேசும். ஆனால் அதை புரிந்துகொள்ளாதான் ஆண்களுக்கு பக்குவம் இல்லை பாவம்.

Love Kavithai Image
Love Kavithai

காதல் கவிதைகள், நட்பு கவிதை படங்கள், காதல் சார்ந்த பாடல் வரிகள் என அனைத்தும் ஒரு இடத்தில இங்கு உள்ளன.