கல்யாண வீட்டு வத்த குழம்பு மணப்பதற்கு காரணம் இந்த பொடி தானா? மணக்க மணக்க காரசாரமான வத்த குழம்பு வைப்பது எப்படி?

vathakuzhambu
- Advertisement -

கல்யாண வீடுகளில் வத்த குழம்பு மணப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரு ஸ்பெஷல் பொடி அரைப்பது எப்படி. அந்த பொடியை வைத்து வத்த குழம்பு மணக்கு மணக்க வைப்பது எப்படி என்பதை பற்றிய சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக. முதலில் வத்த குழம்பு பொடி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம். அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அடி கனமான கடாயாக இருக்கட்டும். அந்த கடாயில் வர மல்லி – 4 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், துவரம்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கருகாமல் பொன்னிறம் வரும் வரை வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். (ஓரளவுக்கு கொஞ்சம் பெரிய ஸ்பூனை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலேயே எல்லா பொருட்களையும் அளந்து கொள்ள வேண்டும்.)

தேவைப்பட்டால் இதில் ஒரு கொத்து கருவாப்பிலையை போட்டு கூட வறுத்துக் கொள்ளலாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை தேவையான அளவு குழம்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த வத்த குழம்புக்கு கட்டாயம் மணத்தக்காளி வத்தல் அல்லது சுண்டக்காய் வத்தல் இரண்டில் ஏதாவது ஒன்று தேவை. அதை முதலிலேயே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து கொஞ்சம் தண்ணீர் ஆகவே புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குழம்பில் புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கும் போது தான் குழம்பின் சுவை கூடுதலாக கிடைக்கும். கரைத்த புளி கொதி கொதித்து சுண்டி வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 10 பல் போட்டு நன்றாக வதக்குங்கள். வெங்காயம் சுருங்கி வந்ததும் தோல் உரித்த பூண்டு பல் – 10, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு மீண்டும் நன்றாக வதக்குங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக சுண்டைக்காய் வத்தல் – 2 டேபிள் ஸ்பூன், அளவு போட்டு அதையும் நன்றாக பொன்னிறம் வரும் வரை எண்ணெயிலேயே சிவக்க விட்டு மிக்ஸி ஜாரில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் பொடியை சேர்க்கவும். உங்களுக்கு காரம் கூடுதலாகவோ குறைவாகவோ தேவை என்றால் இந்த பொடியை கூட்டி குறைத்து சேர்த்துக் கொள்ளவும்.

அரைத்த பொடி எண்ணெயில் போட்டு 30 செகண்ட் வதக்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, குழம்பை தளதளவென கொதிக்க வையுங்கள். குழம்பு கொதி வந்ததும் அடுப்பை மீடியம் தீயில் வைத்து விட்டு குழம்பு சுண்டி, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டால், சூப்பரான வத்த குழம்பு தயார்.

இதையும் படிக்கலாமே: உளுந்து இல்லாமல், மாவு அரைக்காமல், நினைத்த உடனேயே இப்படி கூட மெதுவடை செய்து சாப்பிடலாமா? இப்படி ஒரு மொறு மொறு மெதுவடையை யாரும் வாழ்நாளில் செஞ்சிருக்கவே மாட்டீங்க.

இறுதியாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணையில் வெங்காய வடகம் இருந்தால் அதை போட்டு தாளித்து குழம்பின் மேலே கொட்டி நன்றாக கலந்து விடுங்கள். சூப்பரான கல்யாண வத்த குழம்பு ரெடி. சுடச்சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். இது வேற லெவல் டேஸ்ட்ங்க. ஒரு குண்டான் சுடு சோறு இருந்தாலும் போதாது. செய்யும் போதே நாக்கில் எச்சி ஊர தொடங்கி விடும். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க.

- Advertisement -