காமாட்சி விளக்கு மட்டும் ஏன் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டும் தெரியுமா ?

kamatchi-vilakku3

தமிழகத்தில் உள்ள இந்துக்களின் வீட்டில் காமாட்சி விளக்கை பொதுவாக காணலாம். எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் அது ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது. அனைத்து விஷேஷங்களிலும் எதற்காக காமாட்சி விளக்கிற்கு மட்டும் அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது? வாருங்கள் பார்ப்போம்.

kamatchi vilakku

ஒரு சமயம் காமாட்சி அம்மன், உலக மக்களின் நன்மைக்காக கடும் தவம் புரிந்தாள். அப்போது சகல தெய்வங்களும் அவளுள் அடங்கியது. ஆகையால் ஒருவர் காமாட்சி அம்மனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வாங்கியதற்கான பலனை பெறலாம்.

இன்று போல் பழங்காலத்தில் புகைப்படங்களை கொண்டு தெய்வத்தை வழிபட வில்லை. மாறாக விளக்கேற்றி தான் தெய்வத்தை வழிபட்டனர். காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கை ஏற்ற ஆரமித்தார். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளலும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைத்தது.

kamatchi vilakku

விளக்குகளிலேயே மிக புனிதமானதாக கருதப்படும் காமாட்சி விளக்கை சிலர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர். திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வளம் வருவதற்கும், புகுந்த வீட்டில் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் காரணம், அனைத்து தெய்வங்களின் அருளை ஒரு சேர பெறவே. அதோடு குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குளம் தழைத்து வாழையடி வாழையாக வளரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

kamatchi vilakku

இதையும் படிக்கலாமே:
எந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா ?

பல புனிதர்கள் நிறைந்த காமாட்சி விளக்கை தினம் தோறும் வீட்டில் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல சந்தோஷங்களும் பெருகும்.

English Overview:
Kamatchi Amman vilakku is very traditional lamp in Tamil nadu. Lighting Kamatchi Amman vilakku helps to get grace of Goddess kamatchi Amman. In olden days this was lighten to get grace from ancestor God.